Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2023 19:43:58 Hours

படையினர் பொலிஸாருடன் இணைந்து எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு வழங்கல்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் மற்றும் 2 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர், செவ்வாய்க்கிழமை (28) தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விநியோக நடவடிக்கைகள் சீர்குலைத்தமையால், கொலன்னாவ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் எரிபொருள் விநியோகத்திற்கு உதவ துரித நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, 14 வது காலாட் படைப்பிரிவு படையினர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் விநியோக பவுசர்களுக்கு பாதுகாப்பை வழங்கியதுடன், அந்த வாகனங்களை எவ்வித தாமதமும் இன்றி விநியோகிப்பதற்காக வசதிகளை ஏற்படுத்தினர்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 144 வது காலாட் பிரிகேட் படையினர் மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதலின் கீழ், முழு மாலையும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பவுசர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து பொலிஸாரும் தமது உதவிகளை வழங்கினர்.