Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2023 22:34:32 Hours

இராணுவ பெண் கண்ணிவெடி அகற்றும் படையினர் ஐ.நா பிரதிநிதிகளுக்கு முன்பாக திறமைகளை வெளிப்படுத்தல்

ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழுவானது, தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் போது அவர்களின் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாலியில் உள்ள ஐ.நா. பல பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியில் பணியாற்றுவதற்கான மேலதீக போர் போக்குவரத்து பீ-1 க்கான செயல்பாட்டுத் தயார்நிலைத் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்காக. புதன்கிழமை (22) மத்தேகொட பொறியியல் படைப்பிரிவுக்கு விஜயம் செய்தனர்.

திரு ஜேம்ஸ் விக்டர் டி ரோகோல், கேணல் லாரன்ஸ் கபினா, லெப்டினன் கேணல் ராஜீவ், திரு மார்க் பிளட் மற்றும் திரு. சத்விந்தர் சிங் பால் ஆகியோர் அடங்கிய ஐ.நா. தூதுக்குழுவை, பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால வரவேற்றார்.

விரிவான கண்ணிவெடி அகற்றும் பயிற்சியைப் பெற்ற 03 பெண் அதிகாரிகள் மற்றும் 43 பெண் சிப்பாய்கள், ஐ.நா. பிரதிநிதிகள் குழுவின் முன் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி, அவர்களது ஆண்களுக்கு இணையான திறனை உறுதி செய்தனர்.

இலங்கை இராணுவப் பெண் சிப்பாய்களுக்கான மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி கடந்த வருடம் வவுனியா களப் பொறியியல் பிரிகேட் மற்றும் யாழ். 10 வது இலங்கை கள பொறியியல் படையணி முகாமில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனை குழு பல அமைப்புக்களுக்கு சென்று பலவிடயங்களை அறிந்து கொண்டனர்.

பொறியியல் படையணி படைத்தளபதியும் தலைமை கள பொறியியலாளருமான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன, வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அசங்க பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.