Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2023 19:16:04 Hours

9 வது இலங்கை பீரங்கி படையினரால் வெளி உதவியுடன் வறிய குடும்பத்திற்கு தங்குமிடம்

வெளி நன்கொடையாளர் திரு.விஷ்வ உதர அலஹருவன் அவர்களால் வழங்கப்பட்ட அனுசரணையில் 23 வது காலாட் படைபிரிவின் 233 காலாட் பிரிகேட்டின் 9 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் வெலிகந்த கொலகனவடியாவின் வறிய குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்து கொடுப்பதற்காக உழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர்.

இப் புதிய வீடு 2023 ஏப்ரல் 10 ம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி முன்னிலையில் இவ் வீடு ஒப்படைக்கப்பட்டது.

வெலிகந்த, கொலகனவடியாவில் வசிக்கும் பயனாளிகளான திரு. டபிள்யூ ரவீந்திர மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இரு குழந்தைகளுடன், திறப்பு விழாவிற்கான அன்றைய பிரதம அதிதியான கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களிடம் இருந்து சாவியைப் பெற்றுக்கொண்டனர்.

வீடு திறப்பு விழாவின் இறுதியில் பிரதம அதிதி பயனாளிகளுக்கு சில வீட்டு உபயோகப் பொருட்கள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கினார்.

இக் குடும்பத்தின் கஷ்ட நிலைமையை இப் பகுதியில் சேவையாற்றும் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களால் இத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

233 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர் டப்ளியு ஹேவகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எம்ஐஎஸ் சந்திரகுமார யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் வழங்கினர்.

இந் நிகழ்வில் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அனுசரணைக்கான இணைப்பாளர் திரு.பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.