27th April 2023 22:25:46 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அதி உயர்ந்த திறமை, வீரம் மற்றும் தேசபக்தி கொண்ட போர் வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் மனைவியர்களான திருமதி லலி கொப்பேகடுவ மற்றும் திருமதி மானெல் விமலரத்ன ஆகியோரை இன்று (27) காலை இராணுவ தலைமையகத்தின் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமாக அழைப்பித்தார்.
இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து வருகை தந்த இரு சீமாட்டிகளையும் அன்புடன் வரவேற்றதுடன், அவர்களது அன்பான கணவர்களின் நேசத்துக்குரிய நினைவுகளை நினைவு கூர்ந்து அவர்களின் நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல ஜூக்கி இயந்திரங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் தளபதியின் கேட்போர்கூடத்தில் இரு சீமாட்டிகளின் கைகளாலும் வழங்கி வைக்க அழைக்கப்பட்டனர்.
சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் போது, மறைந்த தமது போர்வீரர்கள் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவையும் உத்வேகத்தையும் பாராட்டி அவர்களது மனைவியருக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.
தொடர்ந்து, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோரால் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.