Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2023 07:07:30 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இராணுவத் தளபதியிடமிருந்து அதிகாரச் சின்னங்களைப் பெறல்

75 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப்ரவரி 4) நிலை உயர்வு பெற்ற 8 மேஜர் ஜெனரல்கள் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 3) மதியம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேஜர் ஜெனரல் நிலைக்கு சிரேஷ்ட பிரிகேடியர்களின் நெலும் பொகுண அரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் பாலச்சந்ர ஆர்எஸ்பீ, 24 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, தர நிரணயம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிஎம்பீபீ திஸாநாயக்க, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் தளபதி பிரிகேடியர் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, 66 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி, ஆராய்ச்சி கருத்தியல் மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜிடபிள்யூஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ஐஏஎன்பீ பெரேரா ஆர்டபிள்யூபீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீபீஏ பெரேரா எச்டிஎம்சி பீஎஸ்சி ஆகியோரது நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்காக அதிக அர்ப்பணிப்பு பாத்திரங்களை உறுதி செய்வதோடு, வரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட உறுதியளித்து, இராணுவத் தளபதியிடமிருந்து நிலைக்கான அதிகாரச் சின்னங்களைப் பெற்று கொண்டனர்.

சுமுகமான உரையாடல்கள் மற்றும் வாழ்த்துக்களுக்குப் பின்னர், இராணுவத் தளபதி புதிய இரு நட்சத்திர ஜெனரல்களுக்கு அவர்களின் புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் ஜெனரலின் வாளை வழங்கினார். இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், குழுப்படங்களை எடுத்துக் கொண்டதுடன் இந்நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.