Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2023 18:10:14 Hours

துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு இரணப்பாளர், கேணல் சர்வர்ட் ஒகுமஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது வெள்ளிக்கிழமை (3) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

நடைபெற்ற சுமூகமான சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம், பாதுகாப்பு நலன்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் இச்சந்திப்பு நிறைவடைந்தது.

கேணல் சர்வர்ட் ஒகுமஸ் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பாதுகாப்பு இணைப்பாளராக செயற்படுகின்றார்.