Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2023 23:06:11 Hours

ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகளுக்கு 75வது சுதந்திர தின பதக்கம் வழங்கல்

75 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசம், சேவை, ஒழுக்கத்துடன் இராணுவத்தில் சேவையாற்றிய மொத்தம் 53 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 17 கடற்படை அதிகாரிகள் மற்றும் 7 விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் முப்படைகளின் சேனாதிபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் (பெப்ரவரி 1) 'விசிஷ்ட சேவா விபூஷணய' பதக்கம் வழங்கப்பட்டது.

அதே விழாவின் போது, தேசிய சுதந்திர தினத்திற்கு முன்பு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘75 வது ஆண்டு சுதந்திர தின பதக்கமும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வருகையை தொடர்ந்து இந்நிகழ்வு ஆரம்பமானது.நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக, வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களின் நினைவாக அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்ததாக ‘75வது தேசிய சுதந்திர தின’ பதக்கம் வழங்குவதற்கான எடுகோல் வாசிக்கப்பட்டது.முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமிருந்து பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.

'விசிஷ்ட சேவா விபூஷணய' (விஎஸ்வி) அலங்காரத்திற்கான எடுகோல், வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு மகத்தான சேவையை வழங்கிய 77 சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் அனைவருக்கும் மதிப்புமிக்க 'விசிஷ்ட சேவா விபூஷணய' பதக்கத்தை வழங்க முப்படைகளின் சேனாதிபதி அழைக்கப்பட்டார். அனைத்துப் பதக்கம் பெற்றவர்களும் குழுப் படங்கள் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பதவி நிலை அதிகாரியுமான திரு, சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஈஎம்எஸ்பி ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் முப்படை அதிகாரிகளின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.