Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2023 21:14:49 Hours

52 வது காலாட் படையினரால் நாவட்குழியில் பாலர் பாடசாலை நிர்மாணிப்பு

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நாவட்குழு கிராமத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது சிங்கள சமூகம் வடக்கு தமிழருடன் அமைதியாக வாழ்ந்து வரும் இக்கிராமத்தில் சிறுவர்களின் நலனுக்கான ‘லக்தரு’ பாலர் பாடசாலையை திறந்து வைத்தார்.

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியுடன் இணைந்து 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் தேவையான வழிகாட்டல்களை வழங்கினார். 523 வது பிரிகேட் தளபதி கேணல் சுபாஷ் சிரிவர்தன மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஈடிஎம் ஜெயகாந்த ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த சமூக நலத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹர்ஷனி போத்தோட்டவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைளுக்கமைய இராணுவத் தலைமையக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களினால் புதிய ‘லக்தரு’ பாலர் பாடசாலையில் சேரும் சகல சிறார்களுக்கும் தலா 5000.00 ரூபா பெறுமதியான 16 அத்தியாவசிய பாடசாலை உபகரண பொதிகளை வழங்கி வைத்தார்.

வியாழன் (ஜனவரி 26) அன்று சுப நேரத்தில் மங்கள விளக்கேற்றப்பட்டு நாட வெட்டப்பட்டு பாலர் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.