Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2023 18:32:58 Hours

SRIMED’ 9 வது குழு தெட்கு சுடானுக்கு புறப்பட தயாரக உள்ளது

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தெட்கு சூடான் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் சிறிமெட் 9 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் புதன்கிழமை (25) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக மைதானத்தில் அமைப்பின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தின் நிலைய தளபதியான பிரிகேடியர் எம்எம் சல்வத்துர ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி யுஎஸ்பி அவர்களால் வரவேற்கப்பட்டதுடன். சிப்பாய்களினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎசி பெர்னாண்டோ யுஎஸ்பி, அவர்களால் பிரதம அதிதி சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளித்து அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லபட்டார் பின்னர் படையினரால் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதையின் வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத் தளபதி இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க மரியாதை செலுத்தினார்.

மேற்படி குழுவினர் முழுமையான பொறுப்புக்களை ஏற்கவுள்ளதை குறிக்கும் வகையில் இலங்கையின் தேசிய கொடி, இராணுவ கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கொடி என்பன ஆகியவற்றை சம்பிரதாயங்களுக்கமைவாக ஒரு பகுதியாக சிறிமெட் குழு தளபதியிடம் கையளித்தார்.

9வது குழுவில் தெற்கு சூடானுக்குச் செல்ல கேணல் எம்பிஎஸ்ஆர் அமரசேகர யுஎஸ்பி மற்றும் 2 வது கட்டளை அதிகாரி மேஜர் ஜேஏடிசிஎச் ஜயசிங்க தலைமையில் 17 அதிகாரிகள் மற்றும் 49 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 66 இராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர்.

குழுவில் விடுதி தலைமை தாதியர், அவசர சிகிச்சை தாதியர் (மகளிர் மருத்துவம்), சத்திர சிகிச்சைக் கூட தொழிநுட்பவியலாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் (டிபிஎம்), ரேடியோகிராஃபர், எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர்கள், ரேடியலஜிஸ்ட், பல் மருத்துவர் மற்றும் பல் உதவியாளர், பல் டெக்னீசியன், மெடிக்கல் களஞ்சிய பொறுப்பாளர்கள், பார்மசிஸ்ட், பார்மசி தொழிநுட்பவியலாளர்கள் ஆகியோர் அடங்குவர். , ஆய்வக தொழிநுட்பவியலாளர்கள், தகவல் தொடர்பு தொழிநுட்பவியலாளர்கள், சுகாதார உதவியாளர், நிர்வாக எழுதுவினைஞர், சமையல்காரர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேத அறை உதவியாளர், என இலங்கை இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த 40 பேரும் இலங்கை சமிக்ஞைப் படையின் இருவரும் (02), பொறியியலாளர் சேவைப் படையின் இருவரும் (02), இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையின் நால்வரும் (04) மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் ஒருவரும் ஆவர்.

அணிவகுப்பின் நிறைவில் சகலருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்ட தளபதியவர்கள் நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் சேர்க்க வேண்டும் என அறிவுரைத்ததோடு, வெளிநாடுகளில் பணியாற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எடுத்துரைத்தார். அதேநேரம் தென் சூடானில் பணியாற்றுகின்ற வேளையில் பின்னபற்ற வேண்டிய ஒழுக்கம் மற்றும் அவர்களிடம் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

ஏற்கனவே தெற்கு சூடானில் ஐ.நா பணிக்கு சேவையாற்றும் 8வது குழுினர், புதிய 9வது குழு பெப்ரவரி 2 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஐ.நாவின் விதிமுறைகளுக்கு இணங்க தமது சேவைக்காலம் முடிந்தவுடன், விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யப்பா ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டியு, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ ஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டியு, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.