Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2023 10:22:27 Hours

போர்களத்தில் சாதனை படைத்த 4 வது கஜபா படையணி மீள் உருவாக்கம்

2007 ஆம் ஆண்டு இயந்திரவியற் காலாட் படையணியாக மாற்றியமைக்கப்பட்ட 4 வது கஜபா படையணி சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராணுவ தளபதியம் கஜபா படையணி படை தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்களால் 4 வது கஜபா படையணி கொடி வழங்கலுடன் மீள் உருவாக்கப்பட்டது. அதன் படி 24 வது கஜபா படையணி 4 வது கஜபா படையணியாக மறுவடிவம் பெற்றது.

1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 4 வது கஜபா படையணி பயங்கரவாதிற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான முக்கிய சேவையை வழங்கியதுடன் இந்த படையணி 2007 பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 3 வது இயந்திரவியற் காலாட் படையணியாக மாற்றப்பட்டது. பின்னர் கஜபா படையணி படையலகு பட்டியலிலிருந்து முறையாக அகற்றிய பின் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு 24 கஜபா படையலகுகளில் மிகவும் கனிஷ்ட படையலகாக இராணுவ சிறப்பு கட்டளையால் பிரகடணப்படுத்தபட்டுள்ளது.

1993-1994 காலப்பகுதியில் 4 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய இராணுவத் தளபதி வௌ்ளிக்கிழமை சம்பிரதாய முறைக்கமைய 4 வது கஜபா படையணி கொடியை கட்டளை அதிகாரியிடம் அடையாளபூர்வமாக ஒப்படைத்தார்.

4 வது கஜபா படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதம அதிதியை கஜபா படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் கே.ஆர் களுபஹன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ தலைமையகத்தின் நுழைவாயிலில் வரவேற்றதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமானது. கஜபா படையணியின் ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு முதலில் இராணுவத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து, மேஜர் ஜி.எஸ். ஹேரத்தின் தலைமையில் அணிவகுப்பு மரியாதையை வழங்குவதற்கு இராணுவத் தளபதி அவர்களை கஜபா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் வரவேற்பு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அணிவகுப்பை மீளாய்வு செய்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் 4 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் டப்ளியூ எம் எ உதய குமார அவர்களிடம் 4 வது கஜபா படையணி கடந்த கால மகிமை, கௌரவம் மற்றும் பெருமையை மீட்டெடுத்த கொடியை கையளித்தார்.

அதனை தொடர்ந்து இராணுவத் தளபதி அணிவகுப்பு மைதானத்தில் கூடியிருந்த படையினரினருக்கு உரையாற்றியதுடன் படையலகின் எதிர்காலத்திற்கு வாழ்த்துககளை தெரிவித்தார். இராணுவத் தளபதி அத்தினத்தின் நினைவாக வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றை நடுவதற்கு முன்னர் குழு படம் எடுக்க அழைக்கப்பட்டார். பிறகு, 2024 இல் பாதுகாப்புச் சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் பாடநெறி நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ளவுள்ள 20 வது கஜபா படையணி அதிகாரிகள் மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அதிகாரிகள் உட்பட 25 அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உரையின் போது தளபதி தனது சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே பி எஸ் எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம் சி பீ விக்கிரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு , 4 வது கஜபா படையணியின் ஓய்வுகபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.