Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2023 21:32:33 Hours

வடக்கு மற்றும் வன்னி படையினரின் பங்களிப்புடன் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்

நாடு முழுவதிலும் உள்ள இராணுவத்தினரால் ‘தைப் பொங்கல்’ தினத்தினை முன்னிட்டு தங்களின் பங்களிப்பை வழங்கி பல்வேறு வகையில் மத அனுஷ்டானங்களுடன் சமூகத் நலத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப் பிரிவின் 552 வது பிரிகேட் படையினரால் உலர் உணவுப் பொதிகள், பாடசாலை பைகள், எழுதுபொருட்கள், தென்னம்பிள்ளைகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாபெரும் சமூகம் சார்ந்த திட்டத்தைத் பளை பொது பஸ் நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (16) முன்னெடுத்தனர்.

இந் நிகழ்வு பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர தலைமையில் பளை இந்து தமிழ் ஒன்றியத்தின் திரு எஸ் மதன் அவர்களால் வழங்கப்பட்ட அனுசரணையில் 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் கருத்தியல் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாட்டில் 552 வது காலாட் பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

பளை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியானது அப்பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கலாசார நடன அம்சங்களால் வண்ணமயமாக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நன்கொடையாளர் திரு எஸ் மதன் வழங்கிய ரூ. 8 லட்சம் நிதியுதவியுடன் படையினரால் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், 150 பாடசாலை பைகள், 500 தென்னம் பிள்ளைகள் மற்றும் தைப் பொங்கல் பாரம்பரிய விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 50,000.00 ரூபாய் மதிப்பிலான பண வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு 1 வது இயந்திரவியற் காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.சி.ஆர் திலகரத்ன மற்றும் 23 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர் எம் ஆர் பி ரத்நாயக்க ஆகியோரின் கண்காணிப்பில் 552 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் ஆர்.ஆர்.எஸ் தெஹிகல அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 552 வது காலாட் பிரிகேட் பிரிகேட் தளபதியுடன் பச்சிலைப்பளை பிரதேச செயலாளர் திரு எஸ்.சி கிருஷ்ணேந்திரன், பளை வர்த்தகசங்க தலைவர் திரு.கே.வைகுண்தநாதன், நன்கொடையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பிரதேசவாசிகள் அன்றைய நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

அதேவேளை, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைப்பிரிவு படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி. 15) மல்லாவி ஆலங்குளம் சித்திவிநாயகர் கோவிலில் தைப்பொங்கல் சிறப்பு பூஜைகளை நடத்தினர். 65 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பூஜையில் கலந்துகொண்டனர். மேலும் இந் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.