Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2023 18:20:47 Hours

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதி விவசாயத்தின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பாய்வு

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் இலங்கை இராணுவத்தின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அண்மையில் கல்கந்த மற்றும் அரலகங்வில பகுதிகளில் அமைந்துள்ள 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி மற்றும் இராணுவப் பண்ணைகளை ஜனவரி 13 - 14 ம் திகதிகளில் மேற்பார்வையிட்டனர்.

பிரதம அதிதியை 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிஎம்டிஎ பெத்தேவெல அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினரால் வாகன தொடரணிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் சேவை வனிதையர் கிளையுடன் இணைந்து பொருளாதார குறைப்பாட்டை நிவர்த்திசெய்யும் நிமித்தம் வறிய குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு பாடசாலை புத்தகங்கள், உலர் உணவு தானியங்கள் காளான் வளர்பிற்கான பொதிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

மேலும், படையினர் ஓய்வு விடுதி, தென்னை, மிளகாய், மா மற்றும் நெற் பயிர் செய்கை திட்டங்கள், கந்தகாடு உணவு பொதி திட்டம் மற்றும் கந்தகாடு நீர்ப்பாசன அமைப்பின் கட்டுமானங்கள் ஆகியவற்றை மீள்ஆய்வு செய்தார். இராணுவத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய படையினருக்கு பாராட்டு மற்றும் நன்றியையும் தெரிவித்தார்.

மறுநாள், படைத் தளபதி அரலகங்வில இராணுவ மாதிரி பண்ணைக்கு விஜயம் செய்ததுடன், அன்றைய நிகழ்வுகளின் நிறைவுக்கு முன்னதாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.