Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2023 18:50:47 Hours

பொறியியல் சேவை படையினரால் காலி வரலாற்று சிறப்புமிக்க நகரசபை கட்டிடம் புனரமைப்பு

1800 முதல் வரலாற்று சிறப்புமிக்க காலி மாநகர மண்டபக் கட்டிடம் 10 வது (தொ) பொறியியல் சேவை படையணியின் நிபுணத்துவம் மற்றும் உழைப்பை பயன்படுத்தி புனர்நிர்மானம் செய்யப்பட்டது.

காலி மேயர் திரு.பிரியந்த ஜி.சஹபந்துவின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 76 மில்லியன் ரூபா நிதியுதவி மாநகர சபையினால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

இத் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைய கட்டளை அதிகாரி மேஜர் ஆர்பிஎ ரோஹன உட்பட 10 வது (தொ) பொறியியல் சேவை படையணியின் மூன்று கட்டளை அதிகாரிகளின் கட்டளை மற்றும் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் கடந்த சனிக்கிழமை (14) வரை தொடர்ந்தது.

புனரமைக்கப்பட்ட இக் கட்டிடம் சனிக்கிழமை (ஜனவரி 14) இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதியும் பொறியியல் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சாந்த குமார, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.