Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2023 05:16:37 Hours

10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரின் நிதியுதவியில் முன்னாள் எல்ரீரீஈ போராளிக்கு சுகாதார வசதி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது பிரிகேட்டின் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் எல்ரீரீஈ முன்னாள் போராளிக்கு அத்தியவசியமான குளியலறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கழிப்பறையும் நிர்மாணிக்கப்பட்டன.

2009 மே மாதத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான போரின் போது ஒரு காலை இழந்த மன்னார், அடம்பன், உதயன், பாப்பாமோட்டையைச் சேர்ந்த திரு.ஏறம்பு சிவானந்த ராசா அவர்கள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிரமங்களை எதிர்கொண்டதை படையினர் 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

‘இதயம் கொண்ட இராணுவம்’ என்பதை நிருபிக்கும் வகையில் தங்களுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்து ஊனமுற்ற முன்னாள் போராளியின் நலனுக்காக இந்த சுகாதார வசதியை அமைக்க முடிவு செய்தனர்.

54 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலுக்கமைய 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்கள் திங்கட்கிழமை (16) குறித்த இடத்திற்குச் சென்று பயன்பாட்டிற்கான தயார்நிலை குறித்து பயனாளிக்கு அறிவித்தார்.

மன்னார் பல வர்த்தகர்களும் நன்கொடையாளர்களும் இராணுவத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி ஆதரவளித்தனர்.