Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2023 05:00:46 Hours

18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் மாளிகாவிலவில் புதிய வீடு நிர்மாணிப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப் பிரிவின் 121 வது பிரிகேட் படையணியின் 18 வது கெமுனு ஹேவா படையினர் ஆதரவற்ற குடிமகன் ஒருவரின் வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்து புத்தளை மாளிகாவிலவில் உள்ள அவரது குடும்பத்தின் நலனுக்காக தனது புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கியுள்ளனர்.

புதிய வீட்டு வெள்ளிக்கிழமை (13) பயனாளியான திரு. எஸ் மார்ட்டின் என்பவறிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா, 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக உடோவிட, 18 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டார்.

பயனாளியான திரு. எஸ் மார்ட்டின், தனது புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் சேகரித்து, பொறியியல் மற்றும் தொழிலாளர் செலவுகளைச் செலுத்த முடியாததால், மனிதவளம் மற்றும் நிபுணத்துவத்திற்கான உதவிக்காக இராணுவத்தை நாடினார்.

மகா சங்கத்தினர் ‘செத்பிரித்’ பாரயாணங்களை தொடர்ந்து , அன்றைய பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க பயனாளியுடன் இணைந்து நாடா வெட்டி பால் பொங்கி வீட்டை திறந்து வைத்தார்.

18 வது கெமுணு ஹேவா படையணி படையினரால் 121 வது காலாட் பிரிகேட் தலைமையகம் திட்டமிட்ட வாரங்களுக்குள் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.