Header

Sri Lanka Army

Defender of the Nation

11th January 2023 19:19:24 Hours

மிகிந்து செத் மெதுரயில் குணமடைந்து வரும் போர்வீரர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை

அத்திடிய 'மிஹிந்து செத் மெதுரவில் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் ஆரோக்கிய ஓய்வு விடுதியில் புதன்கிழமை (11) புதிய ஆயுர்வேத மூலிகை ஆயுர்வேத மருத்துவ மையம், சுவ அரண' என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஆயுர்வேத திணைக்களத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

‘மிஹிந்து செத் மெதுர’ இன் தளபதி பிரிகேடியர் டிஎஸ் பாலசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தலைமையில் ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய புதிய ஆயுர்வேத நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் பிரதம அதிதியை அவரது துணைவியார், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் வரவேற்கப்பட்டனர்.

முதலில், இராணுவத் தளபதி மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 'மிஹிந்து செத் மெதுரயில் உள்ள வார்டுகளுக்குச் சென்று, புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பரிசுப் பொதிகளை பகிர்ந்து கொள்வதற்கு முன்னர், அந்த போர்வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி அவர்கள் பதாதையை திரைநீக்கம் செய்து புதிய 'மிஹிந்து ஆயுர்வேத சுவ அரண'வை மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பாராயணங்களுடன் திறந்து வைத்தார். அங்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தை உன்னிப்பாகப் பார்வையிட்டதுடன், சிகிச்சை முறைகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக வைத்தியர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாட்டு மக்களின் நலனுக்காக தமது உடல்பாகங்களை தியாகம் செய்த போர்வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் தளபதி அவர்கள் அவர்களின் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, இராணுவ வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பிஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி போர் கருவி பணிப்பாளர் நாயகம் டபிள்யுஎம்ஆர்டபிள்யுடபிள்யுடபிள்யுஎச்ஜேபி வணிகசேகர யுஎஸ்பீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு பிஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.