Header

Sri Lanka Army

Defender of the Nation

09th January 2023 19:30:05 Hours

இராணுவ ரக்பி வீரர்களுக்கு பனாகொடையில் புதிய மைதானம்

நாடளாவிய ரீதியில் வலிமைமிக்க அணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ரக்பி/காற்பந்து அணிக்காக பனாகொடயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானம் புதன்கிழமை (4) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைத்தார்.

இலங்கைப் பொறியியல் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய மைதானத்தை திறந்து வைக்க இராணுவத் தளபதி அவர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதாகையினை திறந்து வைத்தார்.

அதன்பின், பிரதம அதிதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான புதிய புள்ளி பதிவு பலகையினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, விளையாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க இராணுவ ரக்பி அணியின் கேப்டனுடன் இணைந்து சிநேகபூர்வ கண்காட்சிப் போட்டியினை ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதிக்கு இராணுவ ரக்பி வீரர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வின் நினைவாக, இராணுவத் தளபதி ரக்பி பந்தில் தனது கையொப்பத்தைக் பதிவிட்டதுடன் கைதட்டல்களின் ஆரவாரத்துடன் போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் விளையாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ அன்றைய பிரதம அதிதிக்கு பாராட்டு நினைவுச் சின்னம் வழங்கினார். இராணுவத் தளபதியும் பதிலுக்கு நினைவு சின்னம் வழங்கினார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரக்பி-காற்பந்து மைதானத்தின் நுழைவாயிலில் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடிவீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து இராணுவத் தளபதியை வரவேற்றனர்.

பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாபா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.