Header

Sri Lanka Army

Defender of the Nation

09th January 2023 19:27:41 Hours

ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி

ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்காக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி இலக்கம் 1' இன் ஆரம்ப நிகழ்வு இன்று (09) காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கருத்தியலின்படி, இலங்கை பொறியியலாளர் படையணியில் ஆரம்பிக்கப்படவுள்ள இப் பாடநெறியில் 500 சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் மூன்று கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. அவர்களின் பணி ஓய்வுக்குப் பின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக வெளிநாட்டில் பணியமர்த்தப்படுவதற்காக இப்பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்மையில் ஓய்வு பெறவுள்ள இலங்கை பொறியியள் படையணியின் 152 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளை இராணுவ தொண்டர் இணை சேவையில் உள்ளீர்த்து கொண்டு 2023 ஜனவரி 12 முதல் பெப்ரவரி 6 ம் திகதி வரை பூ ஓயா பொறியியல் பிரிகேட்டில் முதலாவது பாடநெறி நடைப் பெறும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இதன் பிரதான நோக்கமானது இராணுவ வீரர்கள் தங்களது ஓய்வு கால வாழ்ககையை சிறப்பாக கழிப்பதற்கும் சர்வதேச முகவர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்புகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்குத் அந்நியச் செலாவணியைப் கொண்டு வருவதாகும்.

ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் தலைமை களப் பொறியியலாளரும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்த்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்த்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பாடத்திட்டத்தினை தொடர்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கியதுடன், இந் நிகழ்வில் பிரதம அதிதியான இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களும் உரையாற்றினார்.

இராணுவத் தளபதி தனது உரையில், சர்வதேச ரீதியில் பல வேலை வாய்ப்புகள் உள்ள அத்தகைய தொழில்சார் கற்கைநெறிகளை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இராணுவ உறுப்பினர்கள் தமது சேவையின் போது பல்வேறு தொழில் துறைகளில் தகுதி பெற்றிருப்பதால் ஓய்வுபெறும் அனைத்து இராணுவ உறுப்பினர்களும் எவ்வித சிரமமும் இன்றி சுகபோக வாழ்க்கையை வாழ வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

பாடநெறியின் ஆரம்ப விழாவில் பங்குபற்றிய அனைவருக்கும் பாடநெறிக்குத் தேவையான எழுதுபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியின் குறியீட்டாக இராணுவத் தளபதி அதிகாரவாணையற்ற அதிகாரி 1 டபிள்யூஏஎம் சிறினந்த அவர்களிடம் வழங்கினார்.

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.