Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2023 22:13:33 Hours

7 வது இலங்கை பீரங்கி படையினரால், மகளிர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பரிசுகள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஒருங்கிணைப்பின் கீழ் 23 வது படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் கீழுள்ள 7 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் 2022 டிசம்பர் 27 அன்று பொலன்னறுவை ஹிங்குராங்கொடை தர்மபால போசத் மகளிர் இல்லத்தில் 45 சிறுமிகளுக்கு மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் என்பன பரிசாக வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு ஹோட்டல் உரிமையாளரால் அனுசரணை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 233 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிரித்தலை ஹோட்டல் விவேரவின் உரிமையாளர் திரு ரங்க சில்வா அவர்கள் இந் நிகழ்விற்கு அனுசரணை வழங்கினார்.

7 வது இலங்கை பீரங்கி படையணியின் கலிப்சோ இசைக் குழுவினரின் இசைக் கலைஞர்களால் பாடல் மற்றும் நடன திறமைகளை வெளிப்படுத்தி குழந்தைகளை மகிழ்வித்தனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.