Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2022 23:29:30 Hours

2023 ல் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.

புத்தாண்டு 2023 அன்று இராணுவ தளபதியின் செய்தி

2023 புத்தாண்டு பிரப்பு, இலங்கை இராணுவத்தின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு வளமான புத்தாண்டு பிரப்பிற்கு வாழ்த்துக்களை நான் முழு மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை இராணுவத்தின் துணிச்சலான உறுப்பினர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்கள் அளவிட முடியாதவை, மறுக்க முடியாதவை மற்றும் அவர்களின் உன்னதங்கள் வருட வருடம் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும். தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கடமையின் வரிசையில் உச்சக்கட்ட தியாகம் செய்த இராணுவத்தின் அனைத்து வீரமிக்க ஆண்,பெண் படையினர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன். எமது தாய்நாட்டைப் பாதுகாக்கும் கடமைகளைச் செய்வதில் காயமடைந்து ஊனமுற்ற அனைவரையும் நான் மரியாதையுடன் நினைவு கூர்ந்து அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட தொலைநோக்கு தலைமைத்துவத்திற்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் இலங்கை முப்படைகளின் சேனாதிபதியுமான மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மரியாதைக்குரிய வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டின் தற்போதைய சவால்கள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் திறமையான வழிகாட்டலுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜிடிஎச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீசி பீஎஸ்சி எம்பில், மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீசி பீஎஸ்சி எம்பில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது நன்றி பாராட்டுகின்றேன்.

இலங்கை இராணுவம், தேசத்தின் ‘பாதுகாவலர்’ என்ற வகையில், அதன் சேவைகளை பன்முகப்படுத்தப்பட்ட துறைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கை முன்னெடுத்து வருகிறது. இயற்கைப் பேரிடர்கள், கொவிட் 19 தொற்றுநோய், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் போது இராணுவ வீரர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகள் மிகவும் பெருமையுடன் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இத்தகைய சவால்கள் ஏற்படும் போதெல்லாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது இராணுவ வீரர்களாகிய நமது பிரதான பொறுப்பாகும். இந்த முடிவைச் சந்திக்க, அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகள் போர் தயார்நிலையைப் பேணுவதற்கும், சாத்தியமான சவால்களை தொடர்ந்து திட்டமிடவும் முயற்சி செய்ய வேண்டும் மற்றும் சாத்தியமான சவால்களை எதிர்கொள்ள படையினர்களுக்கு தேவயைான பயிற்சி அளிக்க வேண்டும்.

மிக முக்கியமாக, நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால போராட்டங்களின் போது பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் உங்கள் விதிவிலக்கான ஒழுக்கம், செயல்திறன் மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்காக நான் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன்.

எந்தவொரு இராணுவத்தின் மேலாதிக்கமும் அதன் உறுப்பினர்களின் ஒழுக்கமாகும், எனவே வரும் ஆண்டிலும் நீங்கள் வெளிப்படுத்தும் ஒழுக்கத்தையும் முன்மாதிரியான நடத்தையையும் பேணுவதை நான் வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் சவால்கள் மற்றும் கஷ்டங்கள் உங்களுக்கும் விதிவிலக்கல்ல, இருப்பினும் உங்களால் நம்பி கொடுக்கப்பட்ட கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுதல் உங்கள் அர்ப்பணிப்பு, விசுவாசம், தொழில்முறை மற்றும் நற்பண்புக்கு சான்றாகும்.

வெற்றி பெற்ற இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர்களாகிய நாம், நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக செயற்பாடுகளை பாதுகாப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்பை பெற்றுள்ளோம். இந்த முதன்மைப் பாத்திரங்களுக்கு மேலதிகமாக, பல இரண்டாம் நிலைப் பணிகள் செய்யப்படுகின்றன, மேலும் தேசத்தின் நலனுக்காக, முந்தைய ஆண்டைக் காட்டிலும் அந்தப் பணிகளை மிகவும் திறம்பட மற்றும் திறமையாகச் செய்ய நாம் ஆர்வத்துடன் இருத்தல் வேண்டும்.

அந்த முயற்சிகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அம்சங்களில் நல்லிணக்கம் மற்றும் விரும்பிய வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் நாம் முன்னோடியாக இருக்க வேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் விவசாயத் துறையை மீட்டெடுப்பதில் இராணுவத்தின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும், தன்னலமின்றி கடமையில் ஈடுபடுவதிலும், தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும், நாடு முன்னேற நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நாம் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு இணங்க இராணுவத்தின் நிறுவன கட்டமைப்பு, செயல்பாட்டு வரிசைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுக் கருத்து ஆகியவற்றை நெறிப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்பதையும், 2023 ஆம் ஆண்டின் அதை செயற்படுத்துவது எனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன கருத்துகளின் அடிப்படையில் இராணுவத்தினால் நடத்திகொண்டிருக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான எங்கள் முழு முயற்சிகளையும் மையப்படுத்தவும் விரும்புகிறேன். ஒரு நாடாக நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த கொந்தளிப்பான காலப்பகுதியிலும், இராணுவத்தின் பெருமை மற்றும் திறமையை நிலைநிறுத்துவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் நிர்வகித்து முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் கட்டளைகளின் கீழுள்ளவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது உங்கள் கடமை என்பதை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நினைவுபடுத்துகின்றேன். இந்த சவாலான காலகட்டம் கீழ்நிலை மற்றும் அரசு ஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளதுடன், அவர்களது பிரச்சினைகளை நடைமுறையில் தீர்க்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உங்கள் வரம்புக்கு அப்பாற்பட்ட விடயங்கள் எந்த தாமதமும் இன்றி முறையான ஒழுங்கில் எனக்கு அனுப்பப்படும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எமது விளையாட்டு வீர,விராங்களைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்ட வெற்றிகளைப் பெற்று இலங்கை இராணுவத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளனர், மேலும் எதிர்வரும் வருடம் எமது விளையாட்டுத் துறையில் எமது பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை. சேவையில் உள்ள உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தொழில்சார் மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன். பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், வரும் ஆண்டிலும் அந்த நலத்திட்டங்களைத் தொடர விரும்புகிறேன்.

தேசத்திற்கு கெளரவமான சேவையை வழங்கி பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் கௌரவத்தை மேலும் நிலைநாட்டுவதற்கு நீங்கள் அனைவரும் கைகோர்ப்பீர்கள் என்பதே எனது ஆழ்ந்த எதிர்பார்ப்பாகும். இந்த உன்னத நோக்கத்திற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் இந்தப்புத்தாண்டிலும் இராணுவத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பேணுவதில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இராணுவத்தினருக்காக மகத்தான சேவையை ஆற்றிவரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்போது சுறுசுறுப்பாக சேவையில் ஈடுபட்டு, இந்நாட்டைப் பாதுகாக்கும் உங்கள் அனைவருக்கும், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்பங்களின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், 2023 ஆம் ஆண்டில் இலக்குகளை அடைய தைரியம், வலிமை மற்றும் அதிர்ஷ்டம் கிட்ட பிராத்திக்கின்றேன்.

நம் அன்புக்குரிய தாய்நாட்டைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் நம்மை அர்ப்பணிப்போமாக.

உங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்!

எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ

லெப்டினன் ஜெனரல்

இராணுவத் தளபதி