Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2022 17:49:31 Hours

இராணுவ தளபதி இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட ‘சிறப்பு பை’ ஜனாதிபதியிடம் கையளிப்பு

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் இணைந்து வடிவமைத்த ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய ‘சிறப்பு பை’ இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை பயன்படுத்துவது மரபாக கொண்டுள்ளதுடன் இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பை ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜெயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சி தலைமையில் திறமையான நிபுணர்கள் குழு அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி அதிநவீன சிறப்பு பையினை வடிவமைத்துள்ளனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து உயர்தர மற்றும் நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லும் சிறப்பு பையினை பெற்றுக்கொண்டு பரிசோதித்ததன் பின்னர் இராணுவத்தின் வினைத்திறன் மற்றும் நீடித்த தன்மைக்காக இராணுவத்தினரைப் பாராட்டினார். பாரம்பரியமாக, ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லும் சிறப்பு பையினை அடுத்தடுத்த ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.