Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2022 21:29:38 Hours

65 வது படைப்பிரிவினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் விதவை தாய்க்கு புதியவீடு

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் மடு பிரதேசத்தில் உள்ள தேவையுடைய பொதுமக்களின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டு, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தொழில்நுட்பத் தகுதி பெற்ற படையினரால் வன்னி மாவட்ட செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வன்னியில் இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் விதவை தாய்க்கு மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.

மடு பெரியபண்டிவிரிச்சான் பிரதேசத்தில் வறுமையில் வாழும் திருமதி ராசு காளியம்மா குடும்பத்தின் அவல நிலையை கருத்திற்கொண்டு வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம், மாவட்டச் செயலகத்துடன் கலந்தாலோசித்து, 2022 செப்டெம்பர் 9 ஆம் திகதி நிரந்தர வீடொன்றை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

இத் திட்டம் 65 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க மற்றும் 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 24 வது இலங்கை கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூடிஏ உதயகுமார அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. 24 வது கஜபா படையணியின் தொழில்நுட்ப திறன் வாய்ந்த வீரர்களால் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் முன் முயற்சியால் இக்கட்டுமான பணிகள் 3 மாதங்களுக்குள் முழுமையாக முடித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 17), வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தலைமையில் 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி. 653 வது காலாட் பிரிகேட் தளபதி, சிவில் விவகார அதிகாரி, 24 வது இலங்கை கஜபா படையணி கட்டளை அதிகாரி மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற எளிய நிகழ்வில் புதிய வீடு பதாகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் இந்து சமய சடங்குகள் முடிந்ததும் விதவை பெண்ணுக்கு அடையாளமாக சாவிகள் வழங்கப்பட்டன.