Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 14:15:14 Hours

லெபனானில் உள்ள இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு வெளிநாட்டு பதக்கம் வழங்க அழைப்பு

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் உள்ள 13 வது இலங்கைப் படை பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி மற்றும் அவரது படையினர் அக்டோபர் 2022 இல் லெபனானில் நடந்த லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை இந்தோனேசிய மற்றும் பிரெஞ்சு அமைதி காக்கும் படையினரின் பதக்கங்கள் வழங்கும் விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்து.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை லெபனானில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சிறந்த சேவைகளுக்காக இரண்டு தனித்தனி கட்டளை அதிகாரிகளுக்கும் அவர்களது படையினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

13 வது இலங்கை படை பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.எம்.டி.என் சமரகோன், , இந்தோனேசிய மற்றும் பிரான்ஸ் அமைதி காக்கும் படையினருக்கான இரண்டு ஐ.நா பதக்கங்களையும் அந்த விழாவில் வழங்க அழைக்கப்பட்டார்.

அவ் விழாக்களில் ஐ நா பணிநிலை அதிகாரிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.