Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 19:37:49 Hours

இராணுவ கோப்ரலினால் வெளிநாட்டவரின் கைப்பை மற்றும் பெறுமதியான பொருட்கள் கையளிப்பு

ஞாயிற்றுக்கிழமை (13) பொலன்னறுவை-ஹபரணை பிரதான வீதியில் கிரித்தலை 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முகாமுக்கு அருகில் உள்ள அவுகன புத்தர் சிலை பிரதேசத்தில் கடமையாற்றிய இராணுவ கோப்ரல் ஒருவர் தனது தொழில் நேர்மை மற்றும் நேர்மையை வெளிக்காட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் தொலைந்து போன கைப்பையை சுமார் எழு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தாள், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேனான் கேமரா, இரண்டு ஏடிஎம் அட்டைகள் பவர் பேங்க் என்பவற்றுடன் திருப்பி கையளித்துள்ளார்.

பெரு நாட்டின் சுற்றுலாப்பயணியான திருமதி கயோ சம்பி ஜக்லின் ஸ்லிண்டாவுக்கு சொந்தமான கைப்பையை அண்மித்த பகுதியில் விட்டுச் சென்றதைக் அவதானித்த 2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கோப்ரல் என்ஈடீபி நாணயக்கார அதனை 2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி கட்டளை அதிகாரி மேஜர் என் பி ஈ என் நெரங்கம அவர்கள் பெருவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களது உடைமைகளைப் பெறுவதற்காக கிரிதலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி முகாமுக்கு வருமாறு பெண்மணிக்கு தெரிவித்தார்.

சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மேலும் உள்ளே இருந்த அனைத்து மதிப்புமிக்க பொருட்களுடன் தனது கைப்பையை அப்படியே மீட்டமைக்காக கோப்ரல் என் ஈ டி பி நாணயக்காரவுக்கு பலமுறை நன்றி தெரிவித்தார். கட்டளை அதிகாரியின் அலுவலகத்திற்கு வந்தவுடன் உற்சாகமடைந்த திருமதி ஸ்லிண்டா, இராணுவ கோப்ரலின் முன்மாதிரியான நடத்தையைப் பாராட்டியதுடன், தனது கடவுச்சீட்டு, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கத் தவறியிருந்தால் இலங்கையில் விடுமுறைக்கு வந்திருப்பது குழப்பமாக இருந்திருக்கும் என்று இராணுவத்தின் சிறந்த செயலுக்கு நன்றி தெரிவித்தார்.

பணப்பையுடன் கூடிய கைப்பையை 2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி கட்டளை அதிகாரி இராணுவ கோப்ரல் முன்னிலையில் பெண்மணியிடம் திருப்பிக் கொடுத்தார்.