Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2022 10:54:46 Hours

23 வது இராணுவத் தளபதிக்கு சேவை நலன் பாராட்டு விழா

இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து செழித்தோங்கிய பாரம்பரிய சம்பிரதாய வழிமுறைகளை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சேவை நலன் பாராட்டு விழா வழங்கப்பட்டது. ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் தற்போதைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரால் அன்பான வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.

கஜபா படையணியினரால் உருவாக்கப்பட்ட இராணுவ வாழ்கையில் 39 வருடங்களுக்கும் மேலான சேவையாற்றி அதிக பதக்கங்களைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 2022 மே 31 ம் திகதி இராணுவத் தளபதி பதவியை துறந்ததுடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பதவி உயர்தப்பட்டார்.

இராணுவத் தளபதி மற்றும் அவரது துனைவி இருவரும் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரை இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு அமைவான பிரியாவிடை நடைப்பெரும் பிரதான மண்டபத்திற்கு பெருங் குழல் அணிவகுக்க அழைத்துச் சென்றனர். இப்பிரியாவிடை நிகழ்வில் நாடளாவிய ரீதியில் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் சகிதம் கலந்து கொண்டனர்.

சிறு பருவம் முதல் அன்றைய பிரதம அதிதியான விதம் வரையிலான சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கிய் விஷேட வீடியோ ஔிபரப்பட்டது. இராணுவத் தளபதி, தனது உரையில், கஜபா' குடும்பத்தின் வீரம் மிக்க காலாட்படை வீரராகப் போர்க்களங்களில் காட்டப்பட்ட வீரம் உட்பட, பல்வேறு பாத்திரங்களில் தனது உடனடி முன்னோடி அர்ப்பணிப்புடன் ஆற்றிய செயல்கள் தொடர்பாக உயர்வாகப் பேசினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக செயற்பட்ட திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் ஆக்கப்பூர்வமான பங்கிற்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார். ஜெனரல் சவேந்திர சில்வா தனது பிரியாவிடை உரையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் உயர் தரத்திலான பிரியாவிடை ஏற்பாடுகளுக்காக தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், கடந்த கால வீரர்கள் அனைவரும் எவ்வளவு அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் இராணுவத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். சம்பிரதாயங்களுக்கு அமைவாக இராணுவத் தளபதியினால் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந் நிகழ்வில் பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.