Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2022 22:41:09 Hours

விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் மேலும் இரண்டு விஷேட படையினர் குழுக்கள் விடுகை

இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி இலங்கையின் உயர்மட்ட சிறப்பு நடவடிக்கைப் படைகளில் ஒன்றாக காணப்படுவதுடன் நாடு பெருமை கொள்ளக்கூடிய சிறந்த பயிற்சி பெற்ற பிரிவு எந்தவொரு வழக்கத்திற்கு மாறான இரகசியப் பணிகளைச் செய்ய நன்கு தயாராக உள்ளதுடன் மேலும் பாடநெறி எண் - 52 மற்றும் 53 ஊடாக உயர்மட்ட பயிற்சி பெற்ற 19 அதிகாரிகள் மற்றும் 595 சிப்பாய்கள் தங்களின் தீவிர ஒன்பது மாத பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர், சனிக்கிழமை (29) மாதுருஓயாவில் உள்ள விஷேட படையணி பயிற்சிப் பாடசாலையில் நடந்த விடுகை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்றைய தின பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்ததுடன் அவரை இராணுவத் தொண்டர் படையணி தளபதியும் விஷேட படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாபா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் விஷேட படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி டீஎஸ் ஹொரவலவிதான டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் இணைந்து அன்புடன் வரவேற்றதுடன் விஷேட படையணி பயிற்சி பாடசாலை நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து படையினர் செல்வதற்கு அஞ்சும் இடத்திற்குச் செல்லவும், சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், மூலோபாய இலக்குகளை எடுக்கவும், துணிச்சலான மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தயங்காத விஷேட படையணி படையினரின் அணிவகுப்பு மரியாதையின பெற்றுக் கொள்ளவும் அணிவகுப்பை மறுபரிசீலனை செய்யவும் அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து விஷேட படையணி சின்னங்கள் அன்றய தினம் விடுகை பெரும் படையினருக்கு பொருத்துவதற்காக வானில் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டது. முதலாவதாக இராணுவத் தளபதி அவர்கள் விஷேட படையணி சின்னத்தினை அன்றைய தினம் விடுகை பெறும் படையினருக்கு அணிவித்துடன் தொடர்ந்து மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யபா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவிஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பவர்கள் தொடர்ந்து மீதமுள்ள சின்னங்களை அனிவித்தனர். அதனை தொடர்ந்து பயிற்சியில் சிறந்தவர்களை கௌவரவிக்கும் முகமாக விஷேட படையணி சத்தியப் பிரமாணம் அன்றைய தின நிகழ்வுகளை உயர் மட்டத்திற்கு அழைத்து சென்றது.

இவ்விரு பாடநெறிகளினதும் முறையே சிறந்த மாணவர்களாக கெப்டன் டிஎச்எம்டிஎம் ஹேரத் மற்றும் 2ம் லெப்டினன் ஜேஎஸ்எஸ்எம் ஜெயக்கொடி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இரண்டு பாடநெறிகளிலும் சிறந்த உடல் தகுதிக்கான விருதுகள் லெப்டினன் டிஏகேஎஸ் ரத்நாயக்க மற்றும் லான்ஸ் கோப்ரல் சந்திரசிறி ஆர்எம் பெற்றுக்கொண்டனர். இரண்டு பாடநெறிகளினதும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் விருதுகள் லான்ஸ் கோப்ரல் தேசப்பிரிய யுபிஆர்பி மற்றும் லான்ஸ் கோப்ரல் குமார ஜேடிபி ஆகியோருக்கு வழங்கப்பட்டதுடன் அவர்களின் பெயர்கள் வசிக்கப்பட்டதினை தொடர்ந்து பார்வையாளர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் இராணுவத் தளபதியிடமிருந்து வெற்றிக்கான கிண்ணங்களை பெற்றனர்.

அதன் பின் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் படையினருக்கு உரை நிகழ்த்தியுடன் அதில் அவர் மறைந்த மற்றும் காயமடைந்த விஷேட படையணி வீரர்கனை நினைவு கூர்ந்ததுடன் அவர்களின் சேவை அரப்பணிப்பினை பாராட்டினார். அவர் அந்த பயிற்சி படையினருக்கு எதிர்காலத்தில் பலதரப்பட்ட அமைப்புகளில் தங்கள் கடமைகளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்விற்கு தன்னை அழைத்ததற்காக படையணிக்கு நன்றி தெரிவித்தார்.

விஷேட படையணி இன் வரலாறு மற்றும் அது எவ்வாறு உருவானது என்பதை தெளிவுப்படுத்தியதுடன் நாட்டின் பாதுகாப்பிற்காக விஷேட படையணி நிகரற்ற பங்களிப்பிற்காகவும் அவர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்காகவும் அன்றைய பிரதம விருந்தினர் பாராட்டினார். உயிர்நீத்த அனைத்து விஷேட படையணி போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய அவர், விஷேட படையணியில் சேர்வதற்கு சம்மதித்த விஷேட படையணி படையினரின் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பாராட்டினார்.

ஆயுதப் படையினர் அரசுக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்தும் அவர் உயர்வாகப் பேசினார். பிரதம விருந்தினர் அனைத்து அங்கவீனமுற்ற மற்றும் சேவையாற்றும் விஷேட படையணி படையினர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தியதுடன், விசேட படைப்பிரிவுகளுடன் தொடர்புடைய சிறப்பான கண்ணியத்தையும் பெருமையையும் சுட்டிக்காட்டினார்.

அவரது சுருக்கமான உரையின் முடிவில், அணிவகுப்பு அணிவகுத்துச் செல்லத் தயாராக இருந்தபோது அவருக்கு மீண்டும் அணிவகுப்பு மரியாதை செலுத்தியதினை தொடர்ந்து பயிற்சி படையினரின் அன்றைய பிரதம விருந்தினர் இறுதிப் பாராட்டுக்களுடன் கௌரவிக்கப்பட்டார்.

சிறப்பு இசைக்குழு காட்சி, ஆகாய தாவல் திறன்களின் காட்சி, டேக்வாண்டோ ஷோ, விஷேட படையணி திறன்கள் காட்சி, போர் ரைடர்ஸ் காட்சி மற்றும் நகர்ப்புற போராளிகளின் நேரடி அதிரடி காட்சி, பில்ட்-அப் பகுதிகளில் சண்டை மற்றும் நிராயுதபாணி சண்டை ஆகியவை அன்றைய தின வண்ணமயமான மேடையில் அழகு சேர்த்தன. முடிவில், அனைத்து தேர்ச்சி பெற்ற பயிற்சி படையினருடன் குழு புகைப்படம் எடுக்க அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டதுடன் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தேனீர்விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள், இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, பாதுகாப்பு படை தலைமையக தளபதிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.