28th October 2022 10:08:00 Hours
ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் வியாழக்கிழமை (27) இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பிஎஸ்சீ, ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பிஎஸ்சி ஐஜி, ஆகியோரிடம் இணைந்து இராணுவத் தலைமையகத்திற்கு முன்பாக ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களை வரவேற்றனர்.
அதன் பின்னர் ஓய்வுபெற்ற அனைத்து கொடி நிலை அதிகாரிகளும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி, தலைமைக் களப் பொறியியலாளர், பாதீட்டு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் வருகை தந்த ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.
பின்னர், சமீபத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தலைமையக வளாகம் மற்றும் அதன் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பான விளக்கக்காட்சியைக் காண அனைத்து ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழுவினர் அழைக்கப்பட்டனர்.
பின்னர், வருகை தந்த அனைத்து ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி, முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பி விமலசிரி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, ஆகியோருடன் இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றி பார்வையிட்டனர்.
முப்படை குழுவில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) எல்சிஆர் குணவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி ஐஜி , ரியர் அட்மிரல் (ஓய்வு) எச்எஸ் ரத்னகீர்த்தி விஎஸ்வி யுஎஸ்பீ என்டிசி பிஎஸ்சி, எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) ஓடிஎன்எல் பெரேரா ஆர்டபிள்யுபீ விஎஸ்வி யுஎஸ்பீ, ரியர் எட்மிரல் (ஓய்வு) மொல்லிகொட விஎஸ்வி யுஎஸ்பீ பிஎஸ்சி , ரியர் எட்மிரல் (ஓய்வு) ஏவி அபேயசேன, எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) ஜேபி வனிகதுங்க விஎஸ்வி யுஎஸ்பீ,பிஎஸ்சி, மேஜர் ஜெனரல் (ஓய்வு) (வை) கேடிபி பெரேரா யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் (ஓய்வு) எம்டிஎஸ் சந்திரபால ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்விடி , மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யுபிஜிஎம்யுஆர் பெரேரா யுஎஸ்பீ, ரியர் அட்மிரல் (ஓய்வு) டபிள்யுஎம்பிஎல் வீரசிங்க விஎஸ்வி யுஎஸ்பீ பீஎஸ்சி, எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) கே யகம்பத்விஎஸ்வி யுஎஸ்பீ பிஎஸ்சி, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஆர்வி உடவத்த பிஎஸ்சி ஏடிஓ, ரியர் அட்மிரல் (ஓய்வு) ஏஆர் அமரசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ பீஎஸ்சி, ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) கே எஸ்டி ஈ பெரேரா யுஎஸ்பீ, ரியர் அட்மிரல் (ஓய்வு) சர்கன் என்ஈஎல்டபிள்யு ஜயசேகர விஎஸ்வி யுஎஸ்பீ மற்றும் பிரிகேடியர் (ஓய்வு) பிசி போதேஜு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் வருகை நிறைவேற்று பணிப்பாளர் நாயக கிளை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.