Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2022 10:43:40 Hours

தும்பலியத்த மண்சரிவில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்பு

அங்குருவெல்ல தும்பலியத்த மண்சரிவால் இருமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிருடன் புதையுண்ட தாய் மற்றும் மகனின் சடலங்கள் 611 வது பிரிகேடின் முதலாவது இலங்கை சிங்க படையணி மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணி படையினரால் இரவோடு இரவாக மேற்கொள்ளபட்ட மீட்பு பணியின் மூலம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் மகன்களில் ஒருவர் வேறு தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே இருந்துள்ளார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்களின் மேற்பார்வையில் 611 வது பிரிகேட் தளபதி சுஜீவ எரேகொட தலைமையில் முதலாவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஸ்ரீ சமரசிங்க, 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் அஜித் ஏக்கநாயக்க மற்றும் படையினரின் பங்குபற்றலுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.