10th October 2022 16:46:01 Hours
இலங்கை இராணுவம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போரினை நடத்தி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மனித துன்பங்களுக்குப் பிறகு தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த பெருமைக்குரிய "தேசத்தின் பாதுகாவலர்கள்" திங்கட்கிழமை (அக்டோபர் 10) தனது 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை பனாகொடையில் கோலாகலமாகக் கொண்டாடியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவிற்கு கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்த்தார். சம்பிரதாயமான நிகழ்வில் அன்றைய தினம் இராணுவக் கொடி மற்றும் அனைத்து படையணிகள் மற்றும் அமைப்புகளின் பல வண்ணக் கொடிகளுடன் அன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தகுந்தவாறு மேடை அமையப்பெற்றிருந்தது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்றதை அடுத்து, நுழை வாயிலில் இராணுவ சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் தளபதி இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் அணிவகுப்பு மைதானத்தின் நுழைவாயிலுக்கு வந்தடைந்தார். அங்கு இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டீஜே கொடித்துவக்கு ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்கிரமசிங்க ஆர்டப்ள்யுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோரால் அன்புடன் வரவேற்கப் பட்டதுடன், இராணுவத்தின் சம்பிரதாய நிகழ்வான இராணுவக் கொடியை ஏற்றி அன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அனைத்துத் படையினர்களின் புனிதமான கடமைகளையும் தன்னலமற்ற அர்ப்பணிப்புகளையும் தொகுத்து வழங்கும் இராணுவ கீததிற்கு அனைவரும் எழுந்து நின்றதுடன் தொடர்ந்து இராணுவம் மற்றும் இலங்கையின் வரலாற்றில் வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆண்டு இராணுவ தின அணிவகுப்பு பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ள்யுடப்ள்யுவீ ஆர்டப்ள்யு ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், ஆராச்சி மற்றும் கோட்பாடு பணிப்பாகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஜீடப்ள்யுஎ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி, இரண்டாம் கட்டளையாளராகவும் 77 அதிகாரிகள் மற்றும் 652 சிப்பாய்கள் 25 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அமைந்திருந்தது. பிரதம விருந்தினர் அணிவகுப்பை மீளாய்வு செய்த பின்னர், நேர்த்தியான உடையணிந்த இராணுவத்தினர் இராணுவ மரபுகளுக்கு இணங்க இராணுவ தளபதிக்கு மரியாதை செலுத்தினர்.
மற்றுமொரு நினைவம்சமாக, அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இராணுவத் தளபதியின் பாராட்டுச் சின்னத்தை தெரிவு செய்யப்பட்ட 19 இராணுவ வீரர்களுக்கு அணிவித்தார். வீரம், நேர்மை, தேசிய அவசர நிலைகளில் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலம் கருதாது கடமையாற்றியவர்கள் சின்னம் பெற்றார்கள்.
இந்த நிகழ்வில் தளபதி தனது சுருக்கமான உரையில், கடந்த கால தளபதிகள், உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போர்வீரர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தியதுடன், அனைத்து தரப்புகளும் தங்கள் நல்ல பணிகளையும் அர்ப்பணிப்பையும் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில் அரசியலமைப்பையும் ஜனநாயக செயல்முறையையும் பாதுகாப்பதில் இராணுவம் எப்போதும் உறுதியுடன் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். நியாயமான வள முகாமைத்துவத்தில் இலங்கை இராணுவம் ஒரு முன்மாதிரியாக இருக்க முயற்சிப்பதாகவும், பொருளாதார மறுமலர்ச்சிக்கான தேசிய முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளின் பாரியார்கள், இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி, பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.