Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2022 00:09:11 Hours

தளபதியின் ஆண்டு விழா செய்தி…

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இராணுவத்தின் 73வது ஆண்டு நிறைவு தினத்தில் (அக்டோபர் 10) வெளியிட்ட தனது செய்தியில் நாம் ஒன்றிணைவதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் சமாளித்து, எமது விம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் ஒத்திவைப்பதைத் தவிர்த்து, அமைப்பின் இலக்குகளை அடையவும், தேசத்தின் சிறந்த நலனுக்குச் சேவை செய்யவும் உங்கள் கடமைகளை திறம்பட செய்யுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவரது செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு

இலங்கை இராணுவத்தின் 73வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவத் தளபதியின் செய்தி

இன்று "நாட்டின் பாதுகாவலர்" என்ற பெருமையுடன், இலங்கை இராணுவம் தனது 73 வது ஆண்டு நிறைவை குறிக்கும் இன்று இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நமது அன்புக்குரிய தாய்நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக இணையற்ற சேவையைத் தொடர்கிறது. இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இராணுவத் தளபதி என்ற வகையில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் வெற்றிகரமான பயணத்தை மீள்பார்வை செய்வதற்கு இது மிகவும் பொருத்தமான தருணமாக நான் கருதுகின்றேன்.

முன்னாள் தளபதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் ஆகிய சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களினால் ஆற்றப்பட்ட சிறப்பான சேவையே இராணுவத்தின் இன்றைய நிலைக்கு காரணமாகும். எனவே, இந்த குறிப்பிடத்தக்க நாளில் அவர்களின் தன்னலமற்ற பணிகள் மற்றும் அர்ப்பணிப்பை நான் மதிக்கிறேன். தேசத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எமது தாய்நாட்டைப் பாதுகாத்து, எமது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டி உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துவது எமது கடமையாகக் கருதுகின்றேன். காயம் அடைந்து இன்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இலங்கை இராணுவம் ஒரு தொழில்முறை அமைப்பாக முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலுக்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கும், இராணுவத்தினருக்கு வழங்கிய சிறந்த வழிகாட்டலுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜி டி எச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சி எம்பில் அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய நன்றியை தெரிவிக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பின் முதன்மை அமைப்பாக உறுதியுடன் முன்னணியில் இருக்கும் இலங்கை இராணுவம், கடந்தகால போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பேரழிவு தரும் இயற்கை அனர்த்தங்களை கட்டுபடுத்துவதற்கும், மிக முக்கியமாக, நாட்டில் ஏற்பட்ட மிக சமீபத்திய கொவிட்-19 தொற்று நோயின் போது, முழு நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு திறமையாக பங்களித்தது. இந்தச் சாதனைகள் அனைத்திலும், மூன்று தசாப்தங்களாக நீடித்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை 2009 இல் இல்லாதொழித்து இலங்கை மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தமை, இலங்கை இராணுவத்தின் புகழ்பெற்ற வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பதிவாகியுள்ளது. இந்த பெருமைமிக்க அமைப்பின் உறுப்பினர்களாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் வெற்றிப் பாதை எங்களுடையது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் போர் தயார் நிலையை மிக உயர்ந்த அளவில் பேண வேண்டிய பொறுப்பு, நமது முதன்மைப் போர்ப் பாத்திரமாக இருக்கலாம் அல்லது இயற்கை அனர்த்தங்களின் போது அரச நடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் அத்தியவசிய சேவைகளைப் பராமரித்தல் போன்ற இரண்டாம் நிலை போர் அல்லாத கடமைகளாக இருக்கலாம். மிக முக்கியமாக, நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எழுச்சிகளின் போது பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் நீங்கள் வெளிப்படுத்திய விதிவிலக்கான ஒழுக்கம் மற்றும் தொழில் நிபுணத்துவத்திற்காக உங்கள் அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன்.

இலங்கை இராணுவத்தின் பிரதான பொறுப்பு தேசிய பாதுகாப்பிற்கு உள்ள அச்சுறுத்தல்களை இனங்கண்டு நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கும் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் செயற்படுவதே என்பதை இந்த அமைப்பின் ஒவ்வொரு அங்கத்தவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.மேலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அம்சங்களில் நல்லிணக்கம் மற்றும் விரும்பிய வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் மற்றும் அந்த முயற்சிகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் விவசாயத் துறையை மீட்டெடுப்பதில் இராணுவத்தின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கது. தன்னலமின்றி கடமையில் ஈடுபடுவதிலும், இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும், நாடு முன்னேற நிதி ஸ்திரத்தன்மை தேவைப்படும் நிலவும் நிலையில் இருந்து மீள்வதற்கு ஆதரவளிப்பதிலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக உங்களை வழிநடத்துவதே எனது முக்கிய நோக்கமாகும்.

இலங்கை இராணுவத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்கு தேவையான விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களின் வெற்றி மற்றும் தொழில்சார் மேம்பாட்டிற்கு பயிற்சியும் கல்வியும் அடித்தளமாக இருந்ததை நான் எப்பொழுதும் எடுத்துரைக்கிறேன். இந்தக் கருத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு, இராணுவத்தின் திறன், மற்றும் தொழில் முறையை உயர்த்த நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதனை செயற்படுத்த, அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகள், கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பிலும் தங்களின் கட்டளை கீழ்ள்ளவர்கள் போதுமான அளவு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய, தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.

இராணுவ உறுப்பினர்களின் நலன் மற்றும் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் நடைமுறையில் உள்ளன என்பதை நான் குறிப்பாக குறிப்பிட விரும்புகிறேன். உயிரிழந்த போர்வீரர்கள், ஓய்வுபெற்ற மற்றும் காயமடைந்த இலங்கை இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நலத்திட்டங்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்தும் வசதிகளை வழங்கும். உங்கள் திறமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளை அங்கீகரித்து பாராட்டு சின்னங்களை வழங்க எனது வழிகாட்டுதலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கருத்து நிச்சயமாக உங்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. சேவைகளை மிகவும் திறம்படச் செய்ய கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்தத் திட்டங்கள் தேசத்திற்கு உற்பத்தி மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்கு நீங்கள் செயல்படக்கூடிய சூழலை உருவாக்க உத்தேசித்துள்ளன.

கடந்த 73 வருடங்களில் எமது உறுப்பினர்கள் பெற்ற வெற்றிகளுடன் இராணுவம் விளையாட்டுத் துறையில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று, ஆசிய வலைப்பந்து சம்பியன் மற்றும் ஆசிய கிரிக்கட் சம்பியன் போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு போட்டியிட்ட அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இராணுவத்தின் விளையாட்டு வசதிகளை பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசத்திற்கு கெளரவமான சேவையை ஆற்றி 73 வருடங்களை பூர்த்தி செய்யும் இலங்கை இராணுவத்தின் கெளரவத்தை மேலும் நிலைநிறுத்துவது எனது உச்ச எதிர்பார்ப்பு மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த உன்னதத்திற்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என நான் நம்புகிறேன். நாம் ஒன்றாக ஒன்றிணைவதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் முறியடித்து இராணுவத்தின் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒத்திவைப்பதைத் தவிர்த்து, அமைப்பின் இலக்குகளை அடையவும், தேசத்தின் சிறந்த நலனுக்காகச் சேவை செய்யவும் உங்கள் கடமைகளை திறம்படச் செய்யுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த பிரதான இலக்கை அடைவதற்கான ஒரே உறுதியான வழி, நன்கு நிறுவப்பட்ட இலக்கு அடிப்படையிலான மூலோபாயத்தின்படி எங்கள் திட்டங்களை செயல்படுத்துவதாகும்.

தற்போது பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இராணுவத்தின் கௌரவத்தை பேணுவதற்கும் இலங்கை இராணுவத்தின் பெருமைமிக்க உறுப்பினர் என்ற வகையில் உங்களது மரியாதையைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒப்படைக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். "நாட்டின் பாதுகாவலர்களாக" உயர்ந்த தொழில், ஒழுக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் உங்கள் கடமைகளைச் செய்ய உங்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு

லெப்டினன் ஜெனரல்

இராணுவத் தளபதி