Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2022 15:36:58 Hours

இராணுவ ஆண்டு விழாவினை முன்னிட்டு இரவு முழுவதும் ஆன்மிக 'பிரித்' பராயணம் மற்றும் அன்னதான நிகழ்வு

இராணுவத்தின் 73 வது ஆண்டுவிழா மற்றும் இராணுவ தினத்தினை (அக்டோபர் 10) முன்னிட்டு இறுதி சமய நிகழ்வபி முக்கிய பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இரவு முழுவதுமான ‘பிரித்’ பராயணம் ஓதுதல் நிகழ்வுகள் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (7) மாலை ஆரம்பமானது.

நாட்டின் மிகவும் தேவைமிகுந்த சேவை வழங்குனரின் முன்னோக்கிய பயணத்திற்கான ஆசீர்வாதங்களுக்கு பல மத ஏற்பாடுகளின் வரிசையில் வெள்ளிக்கிழமை இறுதிப் நிகழ்வாக இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ பௌத்த சங்கத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

எதிர்வரும் இராணுவ தினத்தை (10) முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரவு முழுவதுமான ‘பிரித்’ பராயணம் ஓதுதல் மிரிசவெட்டிய பிரதம தேரரும் ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தருமான வண. ஈத்தலவெதுனுவேவே ஞானதிலக தேரர் தலைமையில் இடம்பெற்றது. பொல்ஹெங்கொட அலென் மெத்தினியாராமய பிரதம தேரர் வண. உடுவே தம்மாலோக தேரர், மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வண.வலஹாஹெங்குனுவேவே தம்மரதன தேரர் மற்றும் பல முன்னணி பௌத்த பிக்குகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவ கலாசார நடனக் குழுக்கள், பாரம்பரிய மேளக்காரர்கள் மற்றும் கொடி ஏந்தியவர்களை முதன்மைபடுத்திக் கொண்டு புத்த துறவிகளை வண்ணமயமான ஊர்வலத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஊர்வலத்தில் புனித தாதுவை ஏந்திச் சென்றதுடன் பாரம்பரியமிக்க ‘பிருவான புத்தகம்’ (பழைய புனித விடயங்கள் அடங்கிய புத்தகம்) மேஜர் ஜெனரல் டி ஜே கொடித்துவக்கு ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ் விழாவில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் அனைவரும் வெள்ளை உடை அணிந்த கலந்துகொண்டனர்.

பிக்குகள் ஒளியூட்டப்பட்ட எண்கோண மண்டபத்தில் (பிரித் மண்டபய) அமர்ந்ததும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மகா சங்க உறுப்பினர்களுக்கு பாரம்பரிய தாம்பூல தட்டினை (தெஹெத் வாட்டிய) வழங்கி, 73 வது ஆண்டு விழாவில் ஆசீர்வாத பாராயணங்களை தொடங்குமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிகழ்விற்காக மிக சிரேஷ்ட துறவி, இராணுவத்தின் 73 வது ஆண்டு விழாவின் முக்கியத்துவம் மற்றும் தேசத்திற்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பு சேவைகள் குறித்தும் தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டார். தேரர்கள் காயமடைந்த போர்வீரர்களின் பூரண சுகத்திற்கும், உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்கும் ஆசீர்வாத பிராத்தனை வழங்கியதை தொடர்ந்து, அமைப்பின் புகழ்பெற்ற கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்தார். பௌத்த துறவி இராணுவத்தின் மாறுபட்ட பாத்திரங்களைப் பாராட்டிதுடன், தேசத்தின் பாதுகாவலர்களாக முன்னோக்கிய பயணத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினர் அனைத்து பிரிவுகளின் ஆதரவுடன் 'பிங்கம' (நன்மைக்குரிய செயல்) அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

சனிக்கிழமை (8) புத்த துறவிகளின் 'ஹீல் தான' (காலை உணவு) வழங்குவதன் மூலம், நிகழ்வு நிறைவடைந்துடன் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சனிக்கிழமை காலை தனது பாரியார், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து மகா சங்கத்தினருக்கு ‘ஹீல் தான’ வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.