Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2022 18:40:21 Hours

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் 3 வது சமய வழிப்பாடு

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மூன்றாவது பௌத்த சமய வழிப்பாடு இன்று (28) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம் பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கண்டி தலதாமாளிகையில் அன்றைய தினம் நடைபெற்ற பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டார். காலை 9.15 மணியளவிற்கு வருகை தந்த இராணுவ தளபதியை பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜே கொடித்துவக்கு ஆர்டபில்யுபி ஆர்எஸ்பி என்டியு, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.எஸ். சில்வா ஆர்டபில்யுபி ஆர்எஸ்பி என்டியு, 11 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஎஸ்கே சஞ்சீவ ஆர்டபில்யுபி ஆர்எஸ்பி யுஎஸ்பி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபல்யு.டபல்யு.டபல்யு.எம்.சி.பி விக்கிரமசிங்க ஆர்டபல்யுபி ஆர்எஸ்பி என்டியு பிஎஸ்சி, ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் கேஏயு கொடித்துவக்கு ஆர்.எஸ்.பி, யு.எஸ்.பி, பி,எஸ்.சி, ஐ.ஜி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

இராணுவ சம்பிரதாயத்திற்கமைய இலங்கை இராணுவத் தொண்டர் படையணி, அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பராமரிப்பு பாதுகாப்பு பகுதிகள், படைப் பிரிவுகள், பிரிகேட்கள், படையணிகள், பயிற்சி நிலையங்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள படையணிகளின் பல வண்ண இராணுவக் கொடிகள் பிரதிநிதிகள் / ஆணையிடப்படாத அதிகாரிகளால் தலதா மாளிகையின் மேல் அறைக்கு மரியாதையுடன் ஊர்வலமாக இராணுவத் தளபதியின் தலைமையில் எடுத்துச் செல்லப்பட்டன.

இராணுவத் தளபதி இலங்கை இராணுவக் கொடியை ஊர்வலத்தின் முன்பாக ஏந்திச் சென்றதுடன், அந்தக் கொடிகள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்புக்கான இராணுவத்தின் நீண்ட பயணத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கும் முகமாக 'செத்' பராயணம், பிரித்' மற்றும் மத அனுஷ்டானங்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டன. சமய அனுஷ்டானங்களின் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள் கொடிகளைப் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் கையளித்தனர். இராணுவத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் மிகவும் வணக்கத்திற்குரிய இந்த புனித ஸ்தலத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்துவதற்கான பண காசோலையை இராணுவ தளபதி அதே சந்தர்ப்பத்தில் அடையாளமாக வழங்கினார்.

சமய வழிபாடுகளை மேற்கொண்ட அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க (பிரதி பீடாதிபதி) வண வெண்டருவே உபாலி தேரர் நன்கொடையை ஏற்றுக்கொண்டார். தனது சுருக்கமான சொற்பொழிவில் (அனுஷாசனம்), மூன்று தசாப்த கால மனிதபிமான நடவடிக்கையில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய அமைப்பாக, அனைத்து இலங்கையர்களின் நன்மைக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் இராணுவம் இதுவரை செய்த சாதனைகளைப் பற்றி அவர் உயர்வாகப் பேசினார்.

கண்டி பல்லேகலையில் உள்ள 11 வது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பூஜைகள் ஒழுங்கமைக்கப்பட்டது. தலதா மாளிகை வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வின் அடுத்த கட்டமாக இராணுவ தளபதி கீழ் அறையில் உள்ள விகாரைக்கு 'கிலான்பாச' மற்றும் ' பௌத்த பூஜை' நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பௌத்த தேரர்களுக்கு (சங்கீக தானம்) அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

வண ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் மற்றும் நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோர் சொற்பொழிவுகளை (அனுஷாசனம்) நிகழ்த்தியதுடன், தேசத்தின் நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் நிகழ்வுகள் நிறைந்த 73 வது ஆண்டு நிறைவினை பாராட்டினர். இராணுவத் தளபதி மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மரியாதைக்குரிய மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பரிஸ்கர' வினையும் வழங்கினர்.

வீரம் மற்றும் தன்னலமற்ற தியாகங்களின் ஈடு இணையற்ற நாட்டின் முன்னணி பாதுகாப்பு மைப்பான் இராணுவம் பலதரப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வல்லமைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 1949 ஒக்டோபர் 10 ஆம் திகதி சிலோன் இராணுவமாக 1949 ஆம் ஆண்டு இலக்கம் 17 ஆம் இலக்க இராணுவச் சட்டத்தின் ஊடாக கெய்த்னஸ் ஏர்ல் பிரிகேடியர் ரொட்ரிக் சின்க்ளேரின் கட்டளையின் கீழ் முதல் நிரந்தர படையணி உருவாக்கப்பட்டது. கடந்த 73 வருடங்களில் இலங்கை இராணுவம் இன்றுவரை திறம்பட செயல்பட்டு வந்தது. 24 தளபதிகளால் சிறப்பாக கட்டளையிடப்பட்டு வந்த இந்த அமைப்பு 25 படைப்பிரிவுகளுடன் கூடிய அதன் விரிவாக்கமானது, மிகவும் மக்களுக்கு நட்புறவான பாதுகாப்பு வழங்குனராக நாடு முழுவதும் உள்ள அனைத்து இனத்தவர்களின் இதயங்களையும் மனங்களையும் வென்றுள்ளது.