Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2022 18:33:53 Hours

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக அதிகாரப்பூர்வ இணையத்தளம் அறிமுகம்

இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை (http://alt.army.lk/doo/) வியாழன் (15) அன்று இராணுவத் தலைமையகமான ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தளபதி செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஆரம்பித்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, பொதுப்பணி பணிப்பக பணிப்பாளர நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.யு.எம்.என் மானகே டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பி பீஎஸ்சீ, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.டி.எஸ் சாந்த ரணவீர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பி யூஎஸ்பீ பீஎஸ்சீ, இராணுவ தலைமையகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட பல அதிகாரிகள் புதிய இணையத்தள ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளின் வரலாறு, அமைப்பு, பயிற்சி, எதிர்கால வாய்ப்புகள் பற்றிய விவரங்களைக் கொண்டதாக புதிய இணையதளம் காணப்படுகின்றது.