Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2022 17:36:43 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியிடமிருந்து தனது நிலைச் சின்னம் பெறுகை

இராணுவத் தலைமையகத்தின் முழு பாதுகாப்பு இணைப்பாளர், கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்டிடீஎஸ் சாந்த ரணவீர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பி பிஎஸ்சீ இரண்டு நட்சத்திர ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் இன்று (13) தனது நிலைச் சின்னம் மற்றும் ஜெனரலின் வாளைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்காக சிரேஷ்ட அதிகாரியின் விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையை நினைவுகூர்ந்த அதேவேளை, மதிப்புமிக்க இரண்டு நட்சத்திர நிலை உயர்வுக்கு தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்புகளை ஏற்பதற்கு முன் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளராக பணியற்றினார்.