Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2022 18:07:17 Hours

‘ஆர்யா’ அறக்கட்டளை உறுப்பினர்கள் ‘போர் வீரர்களுக்கான’ அவர்களின் திட்டங்கள் குறித்து இராணுவ தளபதிக்கு விளக்கம்

‘ஆர்யா’ அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகிகள் குழுவினர் , அவ்அமைப்பின் ஆணை, கடந்த கால பொறுப்புகள், தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தற்போதைய இராணுவத் தளபதிக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையாக இன்று (02) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

ஆர்யா அறக்கட்டளையின் தலைவர் திரு சரித் கிரியெல்ல, செயலாளர் திரு ஷமேந்திர விக்கிரமாராச்சி, அறக்கட்டளையின் சிரேஷ்ட ஆலோசகர் விஷாரத ஜகத் விக்ரமசிங்க, டொக்டர் சமாதி ராஜபக்ஷ மற்றும் அறக்கட்டளையின் சிரேஷ்ட உறுப்பினர்களான கலாநிதி லலித் பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக் கலந்துரையாடலின் போது, திரு சரித் கிரியெல்ல, போர்வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக அமைப்பு இதுவரை என்ன செய்துள்ளது மற்றும் எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை விளக்கினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் அவ்மைப்பு கடந்த காலத்தில் ஆற்றிய பணிகளைப் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் போர்வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெரும் நன்மைக்காக அவர்களின் உன்னதப் பணிகளைத் தொடருமாறு வலியுறுத்தினார். தாய்நாட்டில் அமைதியை நிலைநாட்டவும், நாட்டின் ஒருமைப்பாட்டையும், நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காகவும் அந்த போர்வீரர்கள் தமது உயிரையும், கை கால்களையும் தியாகம் செய்தனர், இதனை அனைத்து இலங்கையர்களும் மறந்துவிடக் கூடாது இராணுவத் தளபதி மேலும் நினைவு கூர்ந்தார்.

இவ் சுமுகமான சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி அறக்கட்டளைக்கு இலங்கை இராணுவத்தின் நன்றியைத் தெரிவித்தார்.