Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2022 19:09:04 Hours

இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தளபதிக்கு கௌரவ மரியாதை

இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தான் இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக புதன்கிழமை (31) ஹேரலியவல இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தலைமையகத்திற்கான தனது விஜயத்தை மேற்கொண்டதுடன் அவருக்கு படையினரால் கௌரவிப்பு அளிக்கப்பட்டது.

அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவருக்கு அப்படையணியின் நிலையத் தளபதி கேணல் எச்.எ கீர்த்திநாத அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தலைமையக நுழைவாயிலில் ஒரு சம்பிரதாயமான காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையை மதிப்பாய்வு செய்த அன்றைய பிரதம விருந்தினரான இராணுவத் தளபதிக்கு இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர் இராணுவ மரபுகளுக்கு இணங்க அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

சிறப்பு மேடையில் இருந்து படையினரிடம் உரையாற்றிய லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் "தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாம் நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் கடமையில் கவனம் செலுத்துவது முக்கியம்" என்று கூறினார்.

மேலும் அங்கு உரையாற்றிய இராணுவத் தளபதி அவர்கள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைத் திறனைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தியதுடன், இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தொடர்ந்து சிறந்து விளங்குவதற்குப் அர்பணிப்புடன் செயற்படுவதுடன் இராணுவத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதே சந்தர்ப்பத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பரிதிவட்டம் எறிதலில் போட்டியில் தனது திறமையினை வெளிப்படுத்திய இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் சார்ஜென்ட் பாலித பண்டாரவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அன்றைய பிரதம அதிதி, பார்வையாளர்களின் கரகோசங்களுக்கு மத்தியில் அவருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.

அடுத்து, படையணி தலைமையக வளாகத்திற்கு அவர் விஜயம் செய்ததை நினைவு கூறும் வகையில், வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். இதன் போது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் நிலையத் தளபதி, பிரதி நிலையத் தளபதி, படையணியின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

பின்னர், இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியில் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட படையணி தளபதி அலுவலகத்தை தளபதி திறந்துவைத்தார்.மேலும் அங்கு இடம்பெற்ற புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் தளபதி கலந்து கொண்டார்.

பின்னர், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் வேஹெரவில் உள்ள படையணி தலைமையக வளாகத்திற்கு வந்தடைந்தார், அங்கு அவரை படையணி மையத்தின் தளபதி வரவேற்றார். அவர் புறப்படுவதற்கு முன்னர், இராணுவத் தளபதிக்கு நிலையத் தளபதி பாராட்டு நினைவுப் பரிசை வழங்கினார். அவர் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியில் பார்வையாளர்கள் புத்தகத்தில் பாராட்டுக்களாக சில எண்ணங்களை எழுதியதுடன், அன்றைய நிகழ்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியில் கவுன்சிலின் உறுப்பினர்கள் இந்நாளில் கலந்துகொண்டனர்.