Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2022 13:16:21 Hours

படையினர்களுக்கிடையிலான ரக்பி 2022 சாம்பியன்ஷிப் போட்டி

30 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இராணுவப் படையணிகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி-2022 இன் இறுதி போட்டியில், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் வீரர்கள் 24 புள்ளிகளுடன், இலங்கை சமிக்ஞைப் படையணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றனர்.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மத்தியில் ரக்பியின் புகழ், இராணுவ விளையாட்டுக் காலண்டரில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதுடன், அமைப்புக்கு போற்றத்தக்க நற்பெயரைப் பெற்றுள்ளது. கணிசமான தொடர் வெற்றிகள், அதே நேரத்தில் நாடு முழுவதிலுமிருந்து வரும் எதிரணிகளுக்கு வலுவான சவாலை அளித்து குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு முக்கியத்துவம் அளித்து, பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இந்த போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்து வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இலங்கை இராணுவ கல்லூரி அணி உட்பட 16 படையணிகளுடன் 2022 ஜூன் 27 அன்று இந்தப் போட்டி ஆரம்பமானது.

இராணுவ ரக்பி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஆர்.எம்.எம் ரத்நாயக்க RWP RSP USP மற்றும் இராணுவ ரக்பி சங்கத்தின் செயலாளர் கேணல் டி.ஆர்.டி சாலி ஆகியோர் வருகை தந்த இராணுவ தளபதியை வரவேற்றதுடன், போட்டியை உயர் தொழில்முறை தரத்துடன் வெற்றிகரமாக நடத்த நடவடிக்கை எடுத்தனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெற்றியாளர்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துடன் ஆரவாரங்கங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வழங்கினார். இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கான பரிசுகள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜே கொடித்துவக்கு RWP RSP ndu அவர்களால் வழங்கப்பட்டன.

இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கோப்ரல் சமீர சில்வா போட்டியின் சிறந்த ரக்பி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி போட்டியினை பெருமளவான மக்கள் கண்டுகளித்தனர்.

அ. சாம்பியன்ஷிப் கிண்ணம் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி

ஆ. இரண்டாமிடம் - இலங்கை சமிக்ஞை படையணி

இ. பிளேட் சாம்பியன்ஷிப் - விஜயபாகு காலாட் படையணி

ஈ. பிளேட் இரண்டாமிடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி

உ. போல் சாம்பியன்ஷிப் - கெமுனு ஹேவா படையணி

ஊ. போல் இரண்டாமிடம் - இலங்கை இலேசாயுத காலாட்படையணி

எ. ஷீல்ட் சாம்பியன்ஷிப் - இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் படையணி

ஏ. ஷீல்ட் இரண்டாமிடம் - கஜபா படையணி