30th August 2022 15:42:04 Hours
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) எம்.எம்.சுமணசேன USP அவர்கள், (29) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து தனது புதிய நூலான 'Nonewathi Idiriyata' (නොනැවති ඉදිරියට) எனும் நூலின் பிரதியை வழங்கினார். இது கெமுனு ஹேவா படையணியின் 'Tarry Not Forward' (Maniwatte Abhikkama) எனும் பொன்மொழியாகவும் விளங்குகிறது.
கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், சிரேஷ்ட படைவீரருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.