Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2022 18:55:55 Hours

புதிதாக பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகார சின்னம்

கொமாண்டோ படையணியின் சிரேஷ்ட பிரிகேடியர்களில் ஒருவரான பிரிகேடியர் பிஜிபிஎஸ் ரத்நாயக்க RWP RSP அவர்கள் அண்மையில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்று, (29) காலை சம்பிரதாயமாக இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வைத்து லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களைப் பெற்றுக்கொண்டார்.

அவர் தற்போது கொழும்பு 3, இல் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி இல. 1 இனை தொடர்கிறார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமைப்பின் முன்னேற்றத்திற்காக வியர்வை சிந்திய சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சுமுகமான உரையாடல்களுக்குப் பிறகு, இராணுவத் தளபதி ஜெனரலின் வாளை இரண்டு நட்சத்திர ஜெனரலாக தனது புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் பி.ஜி.பி.எஸ் ரத்நாயக்க RWP RSP இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இராணுவத் தளபதியுடன் பல புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.