24th August 2022 20:30:00 Hours
இன்று (24) காலை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த 'சிவில் நபர் துணிச்சலுக்கான தொண்டு நிறுவன” தலைவர் திரு கே.பி. சந்திரரத்ன அவர்கள், கடந்த 25 வருடங்களாக 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அண்மையில் எழுதிய '1993 - 2018' இலங்கையில் சிவில் நபர் துணிச்சலான’ செயல் தொகுப்பின் ஒரு நகலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு வழங்கினார்.
அங்கு இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் போது தொகுப்பாசிரியர், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களிடம், கடந்த காலத்தில் பொது மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய மிகவும் குறிப்பிடத்தக்க துணிச்சலான செயல்கள் தொடர்பாக குறிப்பி்ட்டதுடன் இந்த தொண்டு நிறுவனத்தை நிறுவுவதற்கு வழிவகுத்த காரணங்களை விளக்கினார்.
கடலில் மூழ்கி உயிரிழப்பதில் இருந்து மீட்பது, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளின் போது மனதளவில் ஒருமித்தல், ரயில் விபத்துகளில் இருந்து தடுத்தல், எதிர்பாராத அவசர காலங்களில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தல் போன்ற அவர்களின் அழியாத செயல்களுக்கு இந்த தொகுப்பு நிச்சயமாக உதவும் என்று ஆசிரியர் குறிப்பிட்டார்.
அவசர காலங்களில் சிவில் சமூக உறுப்பினர்கள் இன்றுவரை ஆற்றி வரும் பங்களிப்பை உயர்வாகப் பேசிய இராணுவத் தளபதி, இவ்வாறானதொரு அமைப்பை நிறுவுவதன் மூலம் சவாலின் தன்மையைப் பொருட்படுத்தாமல் இராணுவம் இரவு பகலாகச் செய்வது போன்ற துணிச்சலான செயலினை சிவில் சமூகம் செய்வதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். மேலும் அவர் குறித்த அமைப்பு மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்து தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தொண்டு நிறுவன நிறுவனரும் தற்போதைய தலைவருமான திரு கசுன் பி.சந்திரரத்னவின் அறக்கட்டளையாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி 'சிவில் நபர் துணிச்சலுக்கான தொண்டு நிறுவன” தொடங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனத்தின் முதல் நடவடிக்கையாக, களுத்துறை உக்வத்தையின் படகு ஓட்டுநர் ஆற்றின் நடுவில் தனது படகு கவிழ்ந்ததில் 6 பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்ததை குறிப்பிடலாம்.பெரும்பாலும், வெளிஉலகிற்கு புலப்படாத அந்த நாயகன்கள் தங்கள் சொந்த உயிரினை தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்ற முன்வருகின்றனர். எனவே, எந்தவொரு நாகரீக சமூகத்தின் முக்கிய கடமை, குறிப்பாக இன்றைய சமூகச் சூழலின் பின்னணியில், அத்தகைய வீரச் செயல்களை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என திரு சந்திரரத்ன கூறுகிறார்.
சுமூகமான சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில் திரு.கே.பி.க்கு நினைவுப் பரிசை வழங்கினார்