Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2022 21:02:08 Hours

பொதுநலவாய விளையாட்டில் வெற்றியீட்டிய இராணுவ வீரர்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

அண்மையில் நடைபெற்ற 'பொதுநலவாய விளையாட்டு - 2022' இல் பரா பரிதிவட்டம் எறிதல் (F42-44/61-64) மற்றும் 55 கிலோ பளுதூக்குதல் பிரிவுகளில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இராணுவத்தின் சார்ஜென்ட் எச்.ஜி பாலித பண்டார மற்றும் கோப்ரல் வை.டி.ஐ குமார ஆகியோர் 24 ஆம் திகதி மதியம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். இதன் போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்புப் படையணியின் சார்ஜென்ட் எச்.ஜி பாலித பண்டார, பரிதி வட்டம் எறிதல் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும், 55 கிலோ பளு தூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை 2 வது (தொ) பொதுச் சேவை படையணியின் கோப்ரல் வயி.டி.அய் குமார வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இலங்கை இராணுவ அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 100 மீ ஓட்டப் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியின் பணிநிலை சார்ஜென்ட் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 'காமன்வெல்த் விளையாட்டு - 2022'ல் தடகளம், பளுதூக்குதல், பரிதி வட்டம் எறிதல் மற்றும் ஏணைய நிகழ்வுகளில் மொத்தம் 37 இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் அந்த சாதனையாளர்களுடனான கலந்துரையாடலின் போது வாழ்த்துக்களையும், அவர்களின் சாதனைகளைப் பாராட்டியதோடு, இந்த சர்வதேச நிகழ்வில் அவர்களின் விளையாட்டுத் திறன்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாராட்டியதுடன், அவர்களின் தடகளத் திறமைகளை மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து உதவி செய்வதாக உறுதியளித்ததுடன் பணிநிலை சார்ஜென்ட் யுபுன் அபேகோனின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேபோன்று, தளபதி அவர்களின் சாதனைகளைப் பாராட்டியதுடன், அவர்களின் எதிர்கால பயிற்சி வாய்ப்புகளுக்கான ஊக்கத்தொகையாக முறையே சார்ஜென்ட் எச்.ஜி பாலித பண்டார மற்றும் கோப்ரல் வை.டி.ஐ குமார ஆகியோருக்கு ரூ. 375,000/= மற்றும் ரூபா. 500,000/= பெறுமதியான பண காசோலைகளை வழங்கினார்.

இராணுவத் தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நளீன் பண்டாரநாயக்க மற்றும் இராணுவ உதவியாளர் கேணல் ஸ்ரீ ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.