Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2022 23:17:14 Hours

‘விக்கும்புர’ நிர்மாணிப்பாளர் நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன், கிராம மக்கள் சந்திப்பு மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ,அவர்கள், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 542 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய போது தனது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சனிக்கிழமை (20) பிற்பகல் விக்கும்புர கிராம மக்களைச் சந்திக்கச் சென்றார். முருங்கன் அருகே உள்ள மாதிரி கிராமம், இராணுவத் தளபதியின் சிந்தனையில் உருவானது, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு இராணுவத் தளபதியின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

மே 2009 க்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்த விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்த, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 20-40 பேர்ச் காணிகள் ஒதுக்கப்பட்டதன் பின்னர் 70 வீடுகளைக் கொண்ட விக்கும்புர மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டது. மேலும் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 542 வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்கள் அரச அதிகாரிகள், வடமாகாண ஆளுநர் மற்றும் தளபதி ஆகியோரின் நெருக்கமான ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களை இந்த புதிய கிராமத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள், வயதான பெற்றோருடன் பெரும்பாலான குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்திருந்தார்கள். மேலும் பயங்கரவாதிகள் கிராம வாசிகள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மிஹிந்தலை உட்பட பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்ததால், இது எனக்கு ஒரு உண்மையான சவாலாக மாறியது. மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால் அவர்களின் நிலை குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நான் அவர்களை நேரில் சென்று சந்தித்து தீர்வு காண்பதாக உறுதியளித்தேன். நரிக்குடாவிற்கு அருகிலுள்ள அரச காணி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அரச நிறுவனங்கள் மற்றும் மீள்குடியேற்ற அதிகாரிகளின் ஆதரவுடன் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னடைவுகளுக்கு மத்தியிலும் எமது கூட்டு முயற்சியின் காரணமாக 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. நான் இந்த யோசனைக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், புதிய கிராமத்தை எனது பெயருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அந்த மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் விரும்பினர்," என்று திட்டத்தின் காரணமானவர் கருத்து தெரிவித்தார்.

விக்கும்புர கிராமத்தில் வசிக்கும் 43 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்தித்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்ததுடன், கிராமத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் உருவாக்கம் தொடர்பான கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்தார், மேலும் 43 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கருவாடு, தானியங்கள், மசாலாப் பொருட்கள், பால் மா போன்றவற்றை உள்ளடக்கிய பரிசுப் பொதிகள் விக்கும்புர கிராமவாசிகளுக்கு வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து இராணுவத் தளபதியின் வருகையைப் பாராட்டிய விக்கும்புர கிராம மக்கள், இத்திட்டத்திற்கான தலைமையையும் முயற்சிகளையும் நன்றியுடன் பாராட்டினர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர, 542 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இராணுவத் தளபதியுடன் கலந்துகொண்டனர்.