15th August 2022 18:30:47 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதி அவர்களின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்று திங்கட்கிழமை (15) வருகை தந்தார்.
33 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையாற்றிய ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது இராணுவத்தினருக்கான தனது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார்.பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது மே 2009 க்கு முன்னர் வழங்கல் அதிகாரியாக இருந்த அதிகாரியின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பு பாத்திரங்களின் நினைவுகளை தளபதி நினைவு கூறுகிறார். "போர்க்களங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி வழங்குவதைத் திறமையாக உறுதிசெய்து, எதிரிகளுடனான சண்டை கடுமையாகவும் தீர்க்கமாகவும் இருந்த நேரத்தில் எந்தத் தடையும் இல்லாமல் அனைத்து வழங்கல் சேவையினை கவனித்துக்கொண்டீர்கள். இது ஓர் உன்னத பணியாகும், நீங்கள் அச்சமின்றி அந்த பொறுப்புகள் அனைத்தையும் துல்லியமாக நிறைவேற்றினீர்கள், இதற்கு நாங்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி, விருந்தினர்களுடன் சில இனிமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு அவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சேவையில் இருந்து வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமைப் பாத்திரங்களை முழுவதும் ஆதரித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டுவதற்கு இராணுவ தளபதி மறக்கவில்லை.ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தையும் நினைவுகூர்ந்தார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிரேஷ்ட அதிகாரியின் குடும்பத்திற்கு சிறப்புப் பரிசுடன் பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக பதவி விலகும் மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்கவுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரி தனது பதவிக் காலத்தில் மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவ நிறுவனங்களில் கட்டளை அதிகாரி மற்றும் பணிநிலை பதவிகளை வகித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரி இரத்மலான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில், தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து இரண்டாம் லெப்டினன் நிலையில அதிகாரவணை வழங்கப்பட்டதன் பின்னர் 05 ஒக்டோபர் 1990 இல் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார்.
அவர் தனது மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவையின் போது அவர் வகித்த சில முக்கிய நியமனங்களில் முதலாவது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகள் வழங்கல் தளபதி,