Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2022 18:21:31 Hours

இராணுவ தளபதி ரத்மலானை இராணுவ முகாமுக்கு திடிர் விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத்தில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் உணவுகளின் தேவைகள், வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றை கண்காணிக்கும் நோக்கத்துடன் 4 வது இலங்கை பொறியியலாளர்கள் படையணி, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகம், மற்றும் இரத்மலானையில் இராணுவ போக்குவரத்து முகாம் ஆகியவற்றின் மதிய உணவு இடைவேளையின் போது அங்கு வசிப்பவர்களின் தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் தனித்தனியாக ஞாயிற்றுக்கிழமை (14) திடீர் விஜயங்களை மேற்கொண்டார்.

அவ்விடங்களில் தளபதி, படையினரின் தங்குமிடங்களை பார்வையிடுவதற்கு முன்னர் உணவு தயாரிக்கும் சமையலறை பகுதிக்கு சென்றார். முன்னேற்றத்திற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை வழங்குவதற்கு முன் சமையல்காரர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குப் பொறுப்பான ஊழியர்களுடன் உரையாடிய லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தினசரி உணவு விபரபட்டியல்கள், தரம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள், கலோரிகளின் உள்ளடக்கம், பாத்திரங்கள், பாகங்கள் மற்றும் உபகரணங்கள், தளபாடங்கள், படுக்கைகள் மற்றும் தங்குமிடப் பிரிவுகளில் உள்ள தறி போன்றவற்றின் தன்மைக் குறித்து கேட்டறிந்தார்.

இராணுவத் தளபதியுடன் பாதுகாப்பு இணைப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர். முதலில், இராணுவத் தளபதி 4 வது இலங்கை பொறியியலாளர்கள் படையணிக்கும் பின்னர் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகம், மற்றும் இரத்மலானையில் உள்ள இராணுவ போக்குவரத்து முகாமிக்கும் விஜயம் மேற்கொண்டார்.