14th August 2022 20:01:25 Hours
LK Domain Registry இனால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘BestWeb.lk 2022’ போட்டியில் அரசாங்கத் துறையின் சிறந்த இணையத்தளம் பிரிவில் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ முதன்மை இணையத்தளமான www.army.lk இற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வடிவமைப்பு, உள்ளடக்கங்கள், புதுப்பிப்புகள், பயனர் நட்பு இயல்பு, தொழில்நுட்பம், நிறம், மொழித் தரம், இலக்கணம், செய்திகளின் மதிப்பு, மற்றும் ஏனைய விடயங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ இணையத்தளமானது, இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணியகத்துடன் இணைந்து இராணுவ தலைமையகத்தின் ஊடக பணிப்பகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.