Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2022 19:03:44 Hours

தேசிய விளையாட்டு சபையின் புதிய உறுப்பினராக தளபதி நியமனம்

கிரிக்கட் அணி முன்னாள் தலைவர் திரு. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தேசிய விளையாட்டு சபைக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) புதிய உறுப்பினர்கள் டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு சபை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையின் கொள்கைப் பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய விளையாட்டு சபை உருவாக்கப்பட்டது.