Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2022 18:14:07 Hours

இராணுவத்தினரால் ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒரு தொகை கொப்பரை தேங்காய் வழங்கள்

ஸ்ரீ தலதா பெரஹெரா நிகழ்வை பிரகாசமூட்டும் முகமாக பயன்படுத்தப்படும் கொப்பரை தேங்காய்கள் (கோப்ரா), இராணுவத்தினரால் 9 வருடமாக தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்படுவதுடன் (29) திகதி காலை தலாதா மாளிகையின் தலைமை விகாராதிபதியிடம் 15 தொன் கொப்பரை தேங்காய்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

பெரஹெரா ஊர்வலம் முழுவதையும் ஒளிரச் செய்வதற்காக அணிவகுப்பில் பங்குபற்றுபவர்களுக்கு கொப்பரை தேங்காய்களை தொடர்ந்து வழங்கும் பழங்கால பாரம்பரிய மரபுகளை கடைபிடித்து, ஒவ்வொரு வருடமும் இந்த பிரத்தியேக மத தேவைக்காக அந்த கொப்பரை தேங்காய் இருப்புகளை தயார் செய்வதில் குருநாகல், போயகன விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் விஜயபாகு காலாட் படையணி படையினர் முக்கிய பங்காற்றுகின்றனர்.

விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் தளபதியும் பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் அழைப்பின் பேரில் அங்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து வழக்கமான தேவா (தினசரி சேவை) மத அனுஷ்டானங்களின் பின்னர் கொப்பரை தோங்காயின் முதல் தட்டை விகாரையின் பாதுகாவலர் திரு பிரதீப் நிலங்க தேல பண்டார அவர்களிடம் வழங்கினார்.

பௌத்தவ கொடிகள் மற்றும் தாமரை தட்டுகளை ஏந்திய படையினர் ஊர்வலமாக தலதா மாளிகை வளாகத்திற்கு கொப்பரை தேங்காய் இருப்புக்களை கொண்டு சென்றதுடன், தியவதன நிலமே மல்லிகைப் பூக்களை வழங்கி இராணுவத் தளபதியை வரவேற்று பூஜை அறைக்கு அழைத்தார்.

சம்பிரதாயங்களின் பின்னர், பௌத்த அருங்காட்சியகத்தினுள் தியவடன நிலமே மற்றும் இராணுவத் தளபதி தலைமையில் இடம்பெற்ற சுருக்கமான சந்திப்பில், எதிர்வரும் எசல பெரஹராவை எவ்வாறு நடத்துவது, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். வருடாந்த திருவிழாவின் இந்த இன்றியமையாத தேவைக்கு இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பாராட்டிய தலைவர், அந்த கொப்பரை தேங்காய்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இறுதியில், தியவடன நிலமே, இந்த 'இராணுவத்தின் உத்தம சேவை பூஜைக்காக' இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் படையினரின் பங்களிப்பைப் பாராட்டினார்.

வருடாந்த ஸ்ரீ தலதா பெரஹேரா விழா, இன்னும் சில நாட்களில் தொடங்குவதுடன் பல தலைமுறைகளாக இலங்கையில் அரச தலைவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் வாழும் நினைவுச்சின்னமான புத்தரின் கோரைப் பல்லுக்கு மிகவும் புனிதமான காணிக்கை செலுத்தப்பட்டு வணங்கப்படுகிறது. அனைத்து விகாரை ஊர்வலங்கள், முக்கிய நிகழ்வுகளின் பயன்பாட்டிற்காக இராணுவத்தால் பதப்படுத்தப்பட்ட கொப்பரைதேங்காய்கள் வழங்கப்படுகின்றன.

கண்டியில் வருடாந்த எசல பெரஹெரா நிகழ்வின் அடையாளமாக 2014 ஆம் ஆண்டு முதல், பெரஹெராவிற்கு விளக்குகளுக்கு பயன்படுத்துவதற்கு அந்த கொப்பரை தேங்காய்களை தயார்படுத்தும் பணிகள் விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஜயபாகு காலாட் படையணியின் தோப்புகளில் இருந்து தேங்காய்கள் சேகரிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் இந்த புனிதமான நோக்கத்திற்காக போயாகன விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தப்படுகிறது.

விஜயபாகு காலாட் படையணியின் தளபதியும் பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மனேகே மற்றும் உபகரண மஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, இராணுவ வழங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், விஜயபாகு காலாட் படையணியின் தலைமையக நிலைய தளபதி

சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.