01st July 2022 19:57:05 Hours
இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைத்து படையினருக்கும் நாட்டில் நிலவும் தற்போதைய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் வகையில், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் சரியான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவற்றைப் புதுப்பிக்கவும், இராணுவத் தலைமையகத்தில் இன்று (1) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அனைத்து நிலையிலான படையினருக்கு உரையாற்றுமாறும், மேற்கூறிய நிலைமைகளின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குக் அறிவூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இராணுவத் தளபதி தனது விரிவான உரையில் இராணுவத்தின் பங்கு மற்றும் பணிகள், அதன் தற்போதைய பாதுகாப்பு ஈடுபாடுகள், பொலிஸ் மற்றும் பிற ஆதரவான கூறுகளுடன் உறவுகளைப் பேணுதல், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, முடிவெடுத்தல், நடைமுறை அணுகுமுறைகள் மற்றும் உரையாடல் மூலம் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள், பொது மக்களுக்கு உதவுதல், தற்போதைய பதற்றம் மற்றும் நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள, நல்லெண்ணத்தைப் பேணுதல் மற்றும் கட்டுப்பாடு, பொது துடிப்புகள் மற்றும் உணர்வுகளை உணர்தல், இராணுவ கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை பராமரித்தல், அனைத்து மட்டங்களிலும் இராஜதந்திரத்தை ஏற்றுக்கொள்வது போன்றவை பற்றி விளக்கமளித்தார்.
இராணுவத் தளபதியை உரையாற்றுவதற்கு முன்னர் பிரதிப் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வரவேற்றார்.
பிரதி இராணுவ தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மை பதவி நிலை அதிகாரிகள் , பணிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.