Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2022 00:40:30 Hours

புதன்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த இராணுவ வீரர்களின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ளும் முகமாக இராணுவத் தளபதி கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்

புதன்கிழமை (13) பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான படையினர்களை பார்வையிடுவதற்காக இன்று (14) பிற்பகல் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பொதுப்பணி பணிப்பகத்தின் பணி்ப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகேயுடன் சென்றிருந்தார்.

அவர்களின் காயங்கள் மற்றும் அர்ப்பணிப்பு கடமைகள் குறித்து கவலை கொண்ட இராணுவத் தளபதி, அவர்களின் நலம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி அதே வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு இராணுவ வீரர்களிடமும் அவர் தனித்தனியாக கலந்துரையாடியுடன் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவ அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.புதன்கிழமை (13) மாலை கட்டுக்கடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக அத்துமீறி நுழைந்து அதனை முற்றுகையிட முயன்றதில் ஒரு தொகையிலான இராணுவ வீரர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

நமது நாட்டின் இந்த இக்கட்டான தருணத்தில் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புக்கள் மற்றும் அர்ப்பணிப்பையும் கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பாராட்டினார். மேலும் அவர்களின் தேவைகள் ஏதேனும் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து தருவதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

இறுதியாக தான் அங்கிருந்து புறப்பட முன்னர் மருத்துவ ஊழியர்களிடம் உரையாடிய இராணுவ தளபதி, நாட்டு மக்களின் நலனுக்காக படையினர் வலுவாக முன் நிற்பதால், காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.