10th July 2022 19:44:29 Hours
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர், அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, ஹிலால்-இ-இம்தியாஸ் அவர்கள் வியாழக்கிழமை (7) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
நடந்த சுமூகமான கலந்துரையாடல்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் நட்பு மற்றும் நல்ல உறவுகளையும், குறிப்பாக பல்வேறு பயிற்சித் நிகழ்வுகள் ஆயுதப்படைகளின் பங்கேற்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றத் தொகுதிகள் தொடர்பான தற்போதைய பரிமாற்று திட்டங்களையும் இருவரும் நினைவு கூர்ந்தனர்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்கள் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரின் நியமனம் குறித்து மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர், அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் இச் சுமுக சந்திப்பு நிறைவுற்றது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது சப்தாரும் மரியாதை நிமித்தமான இச் சந்திப்பில் இணைந்துக்கொண்டார்.